கட்டப்பா.. ஆரம்பமாகும் ஐபிஎல்.. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆதரவாக ரம்யா கிருஷ்ணன் போட்ட மாஸ் மீம்!
சென்னை: கொரோனா கலவரத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா? நடக்காதா? என்று ரசிகர்கள் ஏங்கித் தவித்த நிலையில், இன்று முதல் ஐபிஎல் தெறி விழா துபாயில் நடைபெற உள்ளது.
முதல் போட்டியே நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் போட்டுள்ள பாகுபலி மீம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் ஆரம்பம்
உலகளவில் பிரபலமான கிரிக்கெட் ஜாம்பவான்களை கலந்து போட்டு விளையாடும் ஐபிஎல் போட்டி திருவிழா இன்று ஆரம்பமாகிறது. கொரோனா கலவரங்களுக்கு இடையே, அபுதாபியில் இன்று நடைபெற உள்ள முதல் போட்டியை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தல தோனி
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக தல தோனி அறிவித்த நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். அவர்களை குஷிபடுத்தும் வகையில் இன்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக அவர் அடிக்கப் போகும் சிக்ஸர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ரசிகை
தமிழ் சினிமாவை சேர்ந்த ஏகப்பட்ட பிரபலங்கள் ஐபிஎல் போட்டிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரசிகர்களாக உள்ளனர். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஆல்பம் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

பாகுபலி மீம்
இந்நிலையில், மற்றொரு ஐபிஎல் ரசிகையான நடிகை ரம்யா கிருஷ்ணன், பாகுபலி பட காட்சிகள் மற்றும் ரஜினியின் சந்திரமுகி காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஐபிஎல் வீடியோ மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார் நம்ம ராஜ மாதா. அவரது ட்வீட்டை பார்த்த ஏகப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

விசில் போடு
நடிகை ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் மற்றும் தல தோனியின் போட்டோவை எடிட் செய்து போட்டு, தல தோனிக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் விசில் போடுவது போல ரசிகர்கள் தொடர்ந்து பதிவிடும் கமெண்ட்டுகளும் வைரலாகி வருகின்றன. தீவிர கிரிக்கெட் ரசிகையான ரம்யா கிருஷ்ணன், இன்று முதல் ஐபிஎல் போட்டிகளை தவறாமல் பார்ப்பார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











