சம்மர் லீவு முடிஞ்சு ஸ்கூலுக்கு போற மாதிரி இருக்கு.. ரம்யா கிருஷ்ணன் இப்படி ஃபீல் பண்றாங்களே!
சென்னை: எப்படா ஸ்கூல் திறக்கும் பள்ளிக்கு ஓடலாம் என மாணவர்களே தயாராகி விட்ட நிலையில், மீண்டும் பணிக்குத் திரும்பியது குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் ஃபீல் பண்ணி ஒரு போஸ்ட் போட்டு இருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது.
Recommended Video
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 260 படங்களில் இதுவரை நடித்து தள்ளி இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள அவரை பார்த்த ரசிகர்கள், மிகவும் கவனமா இருங்க என்றும் அன்புக் கட்டளை போட்டு வருகின்றனர்.

50 வயசு
நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 15ம் தேதி வந்தால் 50 வயசு பூர்த்தி ஆகிறது. பாகுபலிக்கே ராஜமாதாவாகவும், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தில், போட்டுத் தாக்கவும் இவரால் மட்டுமே முடியும். 14 வயதில் வெள்ளை மனசு படத்தில் அறிமுகமான இவர், கிட்டத்தட்ட 36 வருடங்களாக சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

ஷூட்டிங் நிறுத்தம்
சாதாரண மக்களுக்கும், சினிமாவில் தினக் கூலியாக வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களுக்குத் தான் இந்த கொரோனா லாக்டவுன் மிகப்பெரிய இழப்புகளையும், கஷ்டங்களையும் கொடுத்தது. ஆனால், சினிமா பிரபலங்களுக்கும் வசதியானவர்களுக்கும் இது ஒரு லாங் ஹாலிடேவாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

ஃபீல் பண்ணும் ரம்யா கிருஷ்ணன்
அண்மையில், சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் அவ்வப்போது பதிவுகளை போட்டு வருகிறார். தற்போது, அவர் பதிவிட்டுள்ள போஸ்ட் ஒன்று பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. சம்மர் லீவு முடிஞ்சு மறுபடியும் ஸ்கூலுக்கு போற மாதிரி இருக்கு என கண்ணீர் சிந்தும் எமோஜியை போட்டு, மீண்டும் நடிக்க தொடங்கிட்டேன் என்பதை போட்டோ போட்டுக் கூறியிருக்கிறார்.

என்ன ஷூட்டிங்
சினிமா, சீரியல், விளம்பரம், வெப்சீரிஸ் என அனைத்து துறையிலும் குயினாக கலக்கி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். சினிமா ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்காத நிலையில், சீரியல் ஷூட்டிங்கா? விளம்பர படமா எதில் நடிக்கிறீங்க? என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். ஆனால், எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.

பாதுகாப்பா இருங்க
மறுபடியும் ஷூட்டிங் தொடங்கும் போது பிரபல நடிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே கொரோனா தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வது தான். முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் ஷூட்டிங் நடக்கிறதா என்பதை கவனிப்பது மிகவும் அவசியமான ஒன்று, முக்கிய நடிகர்கள் யாருக்காவது தொற்று பாதித்தால், மீண்டும் ஷூட்டிங்கே கேன்சல் ஆகும் அபாயமும் இதில் உள்ளதால், ரசிகர்கள், Stay safe மேடம் என்றே கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











