சார்மிக்காக சம்பளத்தில் சலுகை காட்டிய 'சிவகாமி தேவி'
Recommended Video
ஐதராபாத்: சார்மியை ஞாபகம் இருக்கிறதா? சிம்புவின் காதல் அழிவதில்லை, காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு, லாடம் உட்பட சில படங்களில் நடித்தவர்.
பிறகு தெலுங்குக்கு சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். கிளாமர் குயினாக அங்கு வலம் வந்த சார்மி, இப்போது நடிப்பதை குறைத்துவிட்டு, இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார்.
ரக், பைசா வசூல், ஐஸ்மார்ட் சங்கர் ஆகிய படங்களை தயாரித்த இவர்கள், இப்போது ரொமான்டிக் என்ற காதல் படத்தைத் தயாரித்து வருகின்றனர்.

ஜான்வி கபூர்
விஜய் தேவரகொண்டா -ஜான்வி நடிக்கும், ஃபைட்டர் படத்தையும் கரண் ஜோகருடன் இணைந்து இவர்கள் தயாரிக்க இருக்கின்றனர். இதற்காக ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

ரொமான்டிக்
'ரொமான்டிக்' படத்தில் ஆகாஷ் புரி, கேடிகா சர்மா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அனில் படுரீ இயக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் 'சிவகாமி தேவி' ரம்யா கிருஷ்ணன்.

குறைவான சம்பளம்
பாகுபலி ஹிட்டுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நடிக்க, நாள் ஒன்றுக்கு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்குவாராம் ரம்யா கிருஷ்ணன். ஆனால், புரி- சார்மி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு குறைவாகச் சம்பளம் பெற்றிருக்கிறார்.

ஃபைட்டரிலும்...
தெலுங்கு சினிமாவின் ஹாட் டைரக்டர் புரி ஜெகநாத். அவர் சார்மியுடன் இணைந்து தயாரிக்கும் படம் என்பதால் இந்தச் சம்பளச் சலுகையாம். புரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஃபைட்டர் படத்திலும் ரம்யாவுக்கு வெயிட் கேரக்டர் இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











