குறும்படம் உண்மையிலேயே யாருக்கு? அக்ஷராவுக்கா? சிபிக்கா? டேமேஜ்ஜானது என்னவோ அவர்தான்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் போடப்பட்ட குறும்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த குறும்படம் யாருக்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். கமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
நேற்றைய எபிசோட் ரம்யா கிருஷ்ணனுக்கு முதல் நாள் எபிசோட் என்பதால் நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார். சிபியை தவிர மற்ற யாரிடமும் கடுமை காட்டவில்லை ரம்யா கிருஷ்ணன்.

குறும்படம்
சிபி வார்டனாக ஓவர் அதிகாரம் செய்ததாக சக ஹவுஸ்மேட்ஸ் கூறியதை கேட்ட ரம்யா கிருஷ்ணன், சிபியை விளாசினார். நீங்கள் வார்டனாக இருக்கும் பள்ளியில் நான் சேரவே மாட்டேன் என்றார். மேலும் சிபி ரூடாக நடந்து கொண்டதாக கூறியபடி குறும்படம் போட்டார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

ஆக்ரோஷமான அக்ஷரா
இந்த குறும்படத்தில் இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது நடைபெற்ற சண்டை சம்பவம் இடம்பெற்றது.
அதாவது, லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சிபி சாதாரணமாக கூறிய விஷயத்திற்கு தேவையே இல்லாமல் பொங்கினார் அக்ஷரா. கையில் இருந்த துணிகளை தூக்கியடித்த அக்ஷரா, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் தள்ளிவிட்டு உடைத்தார்.

கழுவி ஊற்றப்பட்ட அக்ஷரா
இந்தக் காட்சிகள் அனைத்தும் குறும்படத்தில் இடம்பெற்றது. ஆனால் அந்த எபிசோடில் அக்ஷரா சிபியையும் ராஜுவையும் பிடித்து கன்னாபின்னாவென கத்தினார். அறிவு இருக்கா இல்லையா என கேட்டும் உச்சக்கட்ட கோபத்தை காட்டினார். இதனால் அன்றே சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார் அக்ஷரா.

ரம்யா கிருஷ்ணனால் அப்செட்
ஆனால் நேற்றைய எபிசோடில் சிபியை கண்டித்த ரம்யா கிருஷ்ணன், இந்த குறும்படத்தை போட்டு அக்ஷராவை டேமேஜ் செய்துவிட்டார். சிபி தனது டாஸ்க்கை சரியாக செய்த போதும் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக ரம்யா கிருஷ்ணன் கூறியது ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.

நெட்டிசன்கள் சிபிக்கு ஆதரவு
இறுதியாக அக்ஷராவுக்கு கோபப்படக் கூடாது என ரம்யா கிருஷ்ணன் அட்வைஸ் செய்தாலும், சிபியை அவர் விமர்சித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருந்தது. சமூக வலைதளங்களிலும் ரம்யா கிருஷ்ணனால் டிஸ்அப்பாயின்ட்மெண்ட்தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதேநேரத்தில் சிபிக்கு ஆதரவாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











