Ramya Krishnan Net Worth: ராஜமாதாவின் ராணி வாழ்க்கை.. 53 வயதில் இத்தனை கோடி சொத்து இருக்கா?

சென்னை: Ramya Krishnan Birthday - நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து மிரட்டி வரும் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில், ரஜினிக்கு மனைவியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். மறைந்த பழம்பெரும் நடிகர் சோ ராமசாமியின் உறவுக்கார பெண்ணான ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை 2003ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு ரித்விக் வம்சி என ஒரு மகன் உள்ளார்.

Ramya Krishnan turns 53 today, lets check about her salary and net worth details

சிறந்த டான்ஸர்: பரத நாட்டியத்தில் ஈடுபாடு கொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு 1983ம் ஆண்டு வெள்ளை மனசு எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதன் பின்னர் வெளியான ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்த நடிகருக்கு ஜோடியாக நடித்த நிலையில், தான் சினிமா உலகில் பிரபலமானார் ரம்யா கிருஷ்ணன்.

பார்த்த ஞாபகம் இல்லையோ படத்தில் அந்த காலத்திலேயே டபுள் ரோலில் நடித்து அசத்திய ரம்யா கிருஷ்ணன் அம்மன் படத்திற்கு எல்லாம் முன்பாக சர்வம் சக்தி மயம் படத்திலேயே அம்மனாக நடித்து ரசிகர்களுக்கு அருள் பாலித்தார்.

Ramya Krishnan turns 53 today, lets check about her salary and net worth details

படையப்பா நீலம்பரி: தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். அம்மன் திரைப்படமே தெலுங்கு டப்பிங் திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் நீலம்பரி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை ரசிகர்கள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டார்கள். அப்படியொரு ஃபயர் பர்பார்மன்ஸை அந்த படத்தில் கொடுத்து ஹீரோயின்களாலும் வில்லியாக மிரட்ட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருப்பார்.

Ramya Krishnan turns 53 today, lets check about her salary and net worth details

ராஜமாதாவுக்கு பிறந்தநாள்: பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்து அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்த ரம்யா கிருஷ்ணன் அடுத்து மகேஷ் பாபு நடித்து வரும் குண்டூர் காரம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாகவும் மாறிவிட்டார் ரம்யா கிருஷ்ணன்.

சுமார் 30 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, டிவி தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அயராது உழைத்து வரும் பஞ்ச தந்திரம் மேகி ரம்யா கிருஷ்ணனின் பேங்க் பேலன்ஸ் ரொம்பவே பெருசு என்கின்றனர்.

Ramya Krishnan turns 53 today, lets check about her salary and net worth details

சம்பளம்: நடிகை ரம்யா கிருஷ்ணன் இளம் ஹீரோயின்களுக்கு நிகராக சினிமா படங்களில் நடிக்க சம்பளம் வாங்கி வருகிறாராம். ஒரு படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது என்கின்றனர். சின்னத்திரையில் ஒரு எபிசோடுக்கு நடிக்க 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம்.

Ramya Krishnan turns 53 today, lets check about her salary and net worth details

சொத்து மதிப்பு: சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. மேலும், பல நிலங்களையும் வாங்கி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக ரம்யா கிருஷ்ணனிடம் 98 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X