கமல் சாரை டிஸ்டர்ப் பண்ண விரும்பல.. அதிரடி முடிவெடுத்த பிக்பாஸ் குழு.. புதிய தொகுப்பாளர் இவர்தானா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் முதல் தொகுத்து வழங்கப்போவது நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் எனும் தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில் அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்த வார நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்கிற கேள்வி எழுந்தது.

விஜய்சேதுபதி பெயர்

விஜய்சேதுபதி பெயர்

சன் டிவியின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய்சேதுபதி கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார். அதன் காரணமாக விஜய்சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் வரும் வரை தொகுத்து வழங்குவார் என பேச்சுக்கள் அடிபட்டன.

மீண்டும் சிம்பு

மீண்டும் சிம்பு

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு தான் தொகுத்து வழங்கப்போகிறார் என வைரலாக தகவல்கள் பரவிய நிலையில், மீண்டும் நானே தொகுத்து வழங்குகிறேன் என கமல் கலக்கலாக இதுவரை ஷோவை நடத்தி வந்தார். ரசிகர்கள் சிம்புவின் பெயரையும் தற்போது கமலுக்கு பதில் பரிந்துரைத்தனர். மாநாடு வெற்றியால் உற்சாகமாக இருக்கும் சிம்பு வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

கமல் மகள்

கமல் மகள்

தெலுங்கு பிக் பாஸ் சீசனை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்த நிலையில், கடந்த சீசனில் ஒரு வீக்கெண்ட் எபிசோடை மருமகளான நடிகை சமந்தா தொகுத்து வழங்கினார். அதே போல தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்தது.

விர்ச்சுவல் ஹோஸ்ட்

விர்ச்சுவல் ஹோஸ்ட்

கொரோனா தொற்று பாதித்துள்ள நிலையில், பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும் நடிகர் கமல்ஹாசனே விர்ச்சுவலில் ஜூம் கால் வழியாக ஷோவை தொகுத்து வழங்க தயார் ஆகி விட்டார் என்றும் தகவல்கள் வைரலாகின. ஆனால், பிக் பாஸ் குழு கமல் சாருக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்கிற முடிவை எடுத்து புதிய ஹோஸ்ட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ராஜமாதா தான்

ராஜமாதா தான்

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் சூட்டிங் நடைபெற உள்ள நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்கிற அதிரடியான தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சில வாரங்கள் தொகுத்து வழங்கி இருப்பதால் அவருக்கு இந்த நிகழ்ச்சியை எப்படி கையாள வேண்டும் என்பது நன்கு தெரிந்த ஒன்று என்பதால் அவரையே அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. நாளை முதல் புரமோ அல்லது இன்று இரவு கன்ஃபார்ம் தகவல் லீக்காகும் வரை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X