என்னா ஆட்டம்.. நடிகை திருமணத்தில் பிரபல ஹீரோயின்களின் கலக்கல் டான்ஸ்.. வைரலாகும் வீடியோ!

By

சென்னை: பிரபல நடிகை திருமணத்தில் ஹீரோயின்கள் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழில், நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, மணியார் குடும்பம் உள்பட சில படங்களில் நடித்தவர், மிருதுளா முரளி.

இவர், மலையளத்தில் ரெட் சில்லீஸ் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

நீண்ட நாள் காதல்

பகத் பாசிலுடன் இவர் நடித்த, அயாள் ஞான் அல்ல என்ற மலையாளப் படம் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியில் ரக்தேஷ் என்ற படத்தில் நடித்தார். இதில், கேப்டன் லட்சுமி சேஹைலாக நடித்திருந்தார். இவரும் உதவி இயக்குனர் நிதின் விஜய் என்பவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர்.

டிசம்பர் மாதம்

டிசம்பர் மாதம்

இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நிதின், உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. திருமணம் ஏப்ரல் மாதம் நடக்க இருந்தது.

மகிழ்ச்சிப் பொங்க

மகிழ்ச்சிப் பொங்க

கொரோனா வைரல் பரவல் அதிகமானதால் திருமணம் மாற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் கொச்சியில் கடந்த 29 ஆம் தேதி நடந்தது. இதில் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன், பாடகி சயோனாரா, பாடகர் விஜய் யேசுதாஸ், ராகுல் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை மகிழ்ச்சிப் பொங்க வாழ்த்தினர்.

கூச்சத்துடன் டான்ஸ்

கூச்சத்துடன் டான்ஸ்

இந்த திருமண விழாவின் போது, நடிகைகள் ரம்யா நம்பீசன், பாவனா, சரண்யா மோகன் உள்பட பலர் மணமக்களுடன் நடனம் ஆடினர். மணப்பெண் மிருதுளா முரளியும் ஆடினார். மணமகன் கொஞ்சம் கூச்சத்துடன் டான்ஸ் ஆடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X