பார்ரா.. ரியோவுடன் ஜோடி போடுகிறார் ரம்யா நம்பீசன்

சென்னை: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்திற்கு பிறகு, ரியோ ராஜ் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். இந்த படத்தை செம்ம போத ஆகாதே, பாணா காத்தாடி ஆகிய படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் பாலா சரவணன், ரோபோ ஷங்கர், முனிஷ்காந்த், ஆடுகளம் நரேன், ரேகா, லிவிங்ஸ்டன், மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். பத்ரி வெங்கடேஷின் முதல் இரு படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாதான் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார்.

அக்டோபர் 17-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, கொடைக்கானல், கேரளா, குஜராத் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

ரம்யா

ரம்யா

ரம்யா நம்பீசன் கடைசியாக கவின் நடித்திருந்த நட்புனா என்னனு தெரியுமா? திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் நிறைவு பெற்ற பிக் பாஸ் 3 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற கவின் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன.

ஹீரோ கவின்

ஹீரோ கவின்

இருப்பினும் சின்னத்திரையில் அவருக்கு புகழ் தேடித்தந்தது ‘சரவணன் மீனாட்சி' சீரியல் தான். அவரது உண்மையான பெயரை விட சீரியலில் இவரது பெயரான வேட்டையன் என்பதே இவரது அடையாளம் ஆகும் அளவிற்கு சரவணன் மீனாட்சி' அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

ரியோவுடன்

ரியோவுடன்

ஆச்சரியம் என்னவென்றால், கவினுக்கு பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் ரியோ தான். முதலில் கவினுக்கு ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசன், தற்போது ரியோவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இது சாதனைம்மா

இது சாதனைம்மா

‘சரவணன் மீனாட்சி' 2-வது சீசன் முடிந்து 3-வது சீசனிலும் ரச்சிதா தான் மீனாட்சியாக நடிக்கிறார் என அறிவித்தபோது, சரவணன் மாறினாலும் மீனாட்சி மாறவில்லை என சமூக வலை தளங்களில் கலாய்த்தனர். இப்போது ரம்யா நம்பீசனும் 2 சரவணன் மீனாட்சி ஹீரோக்களுடன் நடித்தவர் ஆகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X