அவர் கூட நடிச்சா.. நிறைய கத்துக்கலாம்.. பிரபல ஹீரோ குறித்து மனம் திறந்த ரம்யா நம்பீசன்!

சென்னை: நடிகை ரம்யா நம்பீசன் விஜய்சேதுபதி குறித்து பேசிய லைவ் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய்சேதுபதி உடன் பீட்சா, சேதுபதி மற்றும் சீதக்காதி உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளார் ரம்யா நம்பீசன்.

Ramya Nambeesan talks about Vijaysethupathi in her recent live video!

இந்நிலையில், லைவ் வீடியோ ஒன்றில் பேசிய நடிகை ரம்யா நம்பீசன், விஜய்சேதுபதி குறித்து பேசும் போது, மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை பற்றி நான் மட்டுமல்ல, யாரை கேட்டாலும், அவங்களும் சொல்லுவாங்க, அவர் ஒரு சிறந்த நடிகர் என்று.

அவருடன் வேலை செய்யும் போது, பல விசயங்களை நாம் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். சில டிப்ஸ்களையும் சக நடிகர்களிடம் தயக்கம் இன்றி பகிர்ந்து கொள்வார். அவர் கூட நடிச்சா.. போட்டி போட்டுக்கிட்டு, நமக்குள்ள இருக்கிற நல்ல நடிப்பு திறமையும் தானாவே வெளியே வரும் என ரம்யா நம்பீசன் பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில், விஜய்சேதுபதி இந்துக்கடவுளை அவமதித்து விட்டார் என்று சர்ச்சைகளும் புகார்களும் எழுந்த நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதி, அமீர்கானின் லால் சிங் சத்தா படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள லாபம், மாமனிதன், யாவரும் கேளிர் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X