twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களின் பிரச்சனைகளை கூறும்.. “The Hide ( UN )learn” ரம்யா நம்பீசனின் முதல் குறும்படம் !

    |

    சென்னை : ரம்யா நம்பீசன் The Hide ( UN )learn எனும் குறும்படத்தை இயக்கிய தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    நடிகை ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் திரையின் பல பக்கங்களை, எப்போதும் முயன்று பார்ப்பவர். ஒரு பக்கம் பாடகராகவும் கலக்கிவரும் அவர், சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து யூடியூப் தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை "Ramya Nambeesan Encore" எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சேனலில் தனது இயக்கத்தில் முதல் குறும்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

    Ramya nambeesan turns director with short film the hide (UN) Learn

    The Hide(UN ) learn எனும் அந்த குறும்படம் இப்போது ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இந்த சேனலில் பதிவேற்றப்பட்டிருக்கும் முதல் வீடியோவான இந்தக்குறும்படம் சமூகத்தில் பெண்களின் வாழ்வை, பிரச்சனைகளை, அதற்கான தீர்வை பேசுகிறது.

    இது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறியதாவது...

    Ramya nambeesan turns director with short film the hide (UN) Learn

    "Ramya Nambeesan Encore" என இணையம் வழி தொடங்கியிருக்கும் எனது இந்தப் பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. உலகில் உள்ள அனைவருடனும், எனது அன்பை, உணர்வை பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. எனது பார்வையை, எனது உலகத்தை, புதுபுது ஐடியாக்களை, பல புதுமையான விஷயங்களை முயன்று பார்க்க மிகப்பெரும் சுதந்திரம் இந்த யூடியூப் தளத்தின் மூலம் எனக்கு கிடைத்திருக்கிறது.

    Recommended Video

    vijay TV Rio Raj: ரியோ ராஜ் படத்தில் அவருக்கு ஜோடி ரம்யா நம்பீசன்

    இந்த தளத்திற்காக முதல் வீடியோவாக The Hide ( UN ) learn எடுக்க ஆரம்பித்தேன். இது இயக்குநராக எனது முதல் முயற்சி. இந்த வீடியோ இன்றைய நவநாகரீக உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, இந்திய சமூகத்தில் அவர்களின் நிலையை சொல்லக்கூடியது. இந்த வீடியோ எனது முதல் படைப்பாக தமிழுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட எனது யூடியூப் தளத்தில் வெளியானது எனக்கு பெரும் மகிழ்ச்சி.

    Ramya nambeesan turns director with short film the hide (UN) Learn

    இந்த வீடியோ வழக்கமான வீடியோ போல் வெறும் பிரச்சனைகளை மட்டுமே பேசக்கூடிய ஒன்று அல்ல. இறுதியில் பிரச்சனைகளுக்கான தீர்வை பற்றி விவாதிக்கவும் செய்வதாக இருக்கும். எனது இந்த யூடியூப் தளம் இது போல் குறும்படங்கள் மட்டுமல்லாது, பாடல்கள், நடனம் மற்றும் கலைவடிவங்கள் பலவற்றையும் முயற்சிக்கும் ஒன்றாக இருக்கும் என்றார்.

    Ramya nambeesan turns director with short film the hide (UN) Learn

    Ramya Nambeesan Encore N Poetic Stories தயாரித்துள்ள "The Hide ( UN ) learn " வீடியோவை ரம்யா நம்பீசன் கருவாக உருவாக்கி, தன் குரலில் விவரித்து, இயக்கியுள்ளார். மேலும் தொழில்நுட்ப கலைஞராக மட்டுமல்லாமல் ஸ்ரிதா ஷிவதாஸ் உடன் இணைந்து இந்த வீடியோவில் நடித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இந்த வீடியோவிற்கு வசனம் எழுதியுள்ளார். நீல் சுன்னா ஒளிப்பதிவு செய்ய ரோஜின் தாமஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ரம்யா நம்பீசனின் சகோதரர் ராகுல் சுப்பிரமணியம் இந்த வீடியோவிற்கு இசையமைத்துள்ளார்.

    English summary
    Actress Ramya nambeesan has turned a director with her first short film the hide (UN) Learn .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X