தீவிர அரசியலில் கவனம்.... கல்யாணத்திற்கு அவசியம் இல்லை - குத்து ரம்யா
சென்னை: ரம்யாவுக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை, அவர் இப்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்துகிறார் என்று அவருடைய தாயார் கூறியுள்ளார்.
குத்து படம் மூலம் அறிமுகமானவம் ரம்யா. குத்து ரம்யா என்று அழைக்கப்பட்ட அவர் கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர். தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் ஏராளமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ரம்யா அதன் பின் திவ்யா ஸ்பந்தனா என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ரம்யா. அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு தலைவியாக செயல்பட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா எங்கு இருக்கிறார் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலுடன் நடிகை ரம்யாவுக்கு துபாயில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவின. பின்னர் திருமணம் ரத்தானது. இதற்கு நடிகை ரம்யாவின் அம்மா ரஞ்சிதா பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது நடிகை ரம்யாவுக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. திருமணம் குறித்து நடிகை ரம்யா முடிவு செய்தால் அதுபற்றி வெளிப்படையாக கூறுவோம். அவருடைய திருமணத்தை மூடி மறைத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
அதோடு நடிகை ரம்யாவும் ரபேலும் நிதானமாக பேசி முடிவெடுத்த பின்பு தான் பிரிந்தார்கள் என்றும், நடிகை ரம்யா இப்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார், ரபேலும் தனது தொழிலில் கவனம் செலுத்திகிறார். மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை.
இருப்பினும் அவர்கள் இன்னும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினரும், நாங்களும் தொடர்பில் தான் இருக்கிறோம் என்றும் வேறு ஏதும் தகவல் வந்தால் நாங்களே கூறுவோம். அதனால் நடிகை ரம்யாவின் திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் ரம்யாவின் அம்மா ரஞ்சிதா கூறினார்.


Click it and Unblock the Notifications











