மகத்தின் முடியை பிடித்து இழுத்து அடி, அடின்னு அடித்த ரம்யா: வைரல் வீடியோ
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத்தை முடியை பிடித்து அடித்துள்ளார் பாடகி ரம்யா.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்தவர்களில் பாடகி ரம்யாவுக்கு பார்வையாளர்களிடையே நல்ல பெயர். அவர் மகத்தை தனது சகோதரர் போன்று பார்த்துக் கொண்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மகத் ரம்யாவை பார்க்கச் சென்றார்.
ரம்யா
மகத்தை பார்த்த ரம்யா அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து என்னடா பண்ண உள்ள என்று கேட்டு அவரை பேப்பரை சுருட்டி அடித்தார். அடி வாங்கிய மகத் மும்தாஜை மிஸ் பண்ணுவதாக கூறினார். மேலும் பிக் பாஸிடம் ரம்யா பற்றி புகார் தெரிவித்தார். இந்த வீடியோவை ரம்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிராச்சி
ரம்யா மகத்தை அடித்த வீடியோவை பார்த்த ஒருவரோ அப்படியே அவரின் காதலி பிராச்சியிடமும் அடிவாங்க வச்சா நல்லா இருக்கும் என்று போட்டுக் கொடுத்துள்ளார்.

சிம்பு
பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிய கையோடு முதல் வேலையாக சிம்புவை சந்தித்தார் மகத். சிம்பு அவரை செல்லமாக கன்னத்தில் அறைந்தார். மகத் செய்ததற்கு சீரியஸாக அறைந்தால் கூட யாரும் சிம்புவை திட்டியிருக்க மாட்டார்கள்.
யாஷிகா
எது நடந்தாலும் மகத் யாஷிகாவுடனான காதலை தொடரக் கூடாது என்று நினைக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். மீண்டும் பிராச்சியிடமே திரும்பிச் செல்லுமாறு கூறுகிறார்கள். ஜனனி கூட அதையே தான் சொல்லி அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யாஷிகா வெளியே வந்தால் தானே தெரியும் எந்த காதல் தொடரும் என்று.


Click it and Unblock the Notifications











