அடேங்கப்பா.. மம்மூட்டி படத்தில் நடிக்கிறாரா ரம்யா பாண்டியன்.. சத்தமே இல்லாமல் நடக்கும் சூட்டிங்!
சென்னை: சூர்யா தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் பட்டையை கிளப்பிய ரம்யா பாண்டியன் அடுத்ததாக மெகாஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார்.
இந்நிலையில், தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போட்டோஷூட்டுக்கு லீவ்
அடிக்கடி போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமையே திணறவிட்டுக் கொண்டிருந்த நடிகை ரம்யா பாண்டியன் திடீரென போட்டோஷூட்டுக்கு இப்படி லீவு விட்டுள்ளாரே புதிதாக எந்த படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதற்கு சூப்பரான விடையும் கிடைத்துள்ளது.

மம்மூட்டி படம்
மலையாள திரையுலகின் மெகாஸ்டார் மம்மூட்டி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் "நண்பகல் நேரத்து மயக்கம்" எனும் படத்தில் தான் நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகி நடித்து வருகிறாராம். ஏற்கனவே மாலை நேரத்து மயக்கம் என ஒரு படம் வந்த நிலையில், இப்போ நண்பகல் நேரத்து மயக்கம் என ஒரு படம் உருவாகி வருகிறது.

ஜல்லிகட்டு இயக்குநர்
இந்திய அரசு சார்பில் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட ஜல்லிகட்டு படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் மல்லிசேரி இயக்கத்தில் தான் இந்த படம் உருவாகி வருகிறது. ஆமென், அங்கமாலி டைரிஸ், ஜல்லிகட்டு என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார்.

பழனியில் படப்பிடிப்பு
வேளாங்கன்னியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது படக்குழுவினர் பழனியில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிரர் செல்ஃபி
நீண்ட நாட்களாக ரசிகர்களுக்காக எந்தவொரு போட்டோவும் இன்ஸ்டாகிராமில் பதிவிடாமல் இருந்து வந்த ரம்யா பாண்டியன் படப்பிடிப்பு இடையே கிடைத்த சின்ன கேப்பில் மிரர் செல்ஃபியை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு தற்போது வைரலாக்கி உள்ளார். சூர்யா தயாரிப்பில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு அடுத்து சூப்பர் ஜாக்பாட்டாக மம்மூட்டியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











