தேசத்தோடு ஆரி ஒட்டி வாழலையாம்.. ரம்யா சொல்றாங்க.. அப்புறம் எப்படி மக்கள் சப்போர்ட் ஆரிக்கு இருக்கு?

சென்னை: ஆரி பேகேஜ் வச்சிருக்கார் என்று சொல்லி தினமும் ஆரி பத்தி பேசும் ரம்யா தான் அதிக பேகேஜ் வச்சிருக்கார் என பிக் பாஸ் ரசிகர்கள் ரம்யா பாண்டியனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

கொடுக்கப்பட்ட வாசகங்களை ஹவுஸ்மேட்கள் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்கிற அதி அற்புதமான அடுத்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பாலாவும் ரம்யாவும் ஆரிக்கு வாசகங்களை கொடுக்கும் காட்சி இந்த மூன்றாவது புரமோவில் இடம்பெற்றுள்ளது.

தேசத்தோடு ஒட்டி வாழ்

தேசத்தோடு ஒட்டி வாழ்

யாருக்கும் எதையும் சொல்ல தேவையில்ல என இரண்டாவது புரமோவில் ஆரி சுருங்க பேசிவிட்டு வாசகத்தை கொடுத்து விட்டு சென்றார். ஆனால், ரம்யா பாண்டியன் ஆரிக்கு தேசத்தோடு ஒட்டி வாழ் என்கிற வாசகத்தை கொடுத்துவிட்டு, வீட்டில் இருப்பவர்களுடன் ஆரி ஒட்டி வாழவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

கணக்கு வாத்தியார் பொண்ணோ

கணக்கு வாத்தியார் பொண்ணோ

பிக் பாஸ் வீட்டில் இப்போ 7 பேர் தான் இருக்காங்க என்பதே தெரியாமல், 8 பேரில் அவர் மட்டும் தனியா இருக்கிறார் என ரம்யா பேசியதை பார்த்து நெட்டிசன்கள் ஒருவேள ரம்யா கணக்கு வாத்தியார் பொண்ணோ என கிண்டல் அடித்து வருகின்றனர்.

யாருக்கு பேகேஜ்

யாருக்கு பேகேஜ்

இந்த வாரம் முழுவதும் ஆரிக்குத் தான் பேகேஜ் இருக்கு என தொடர்ந்து பேசி வருவது ரம்யா பாண்டியன் தான். இதிலேயே யாருக்கு அதிக பேகேஜ் இருக்கு என்பது தெரிந்திருக்கும். கடந்த வாரமும் கமல் சார் எபிசோடில், வந்த 90 நாட்களுக்கும் சேர்த்து தான் ஆரியை நாமினேட் செய்தேன் என்று கூறிய சவுக்கடி வாங்கியது போதவில்லை போல் தெரிகிறது.

இந்த வாரம் இவர்தான்

இந்த வாரம் இவர்தான்

இப்படியே ரம்யா பாண்டியன் தொடர்ந்து பேசி வருவதால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது ரம்யா பாண்டியன் தான் என ரசிகர்கள் அடித்து சொல்லி வருகின்றனர். கடந்த வாரமே ஆஜீத்துடன் போட்டியிட்ட ரம்யா பாண்டியன் இந்த வாரம் நிச்சயம் வெளியேறிடுவார் என்று கணித்து வருகின்றனர்.

தேசமே சப்போர்ட்

தேசமே சப்போர்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பல கோடி மக்கள் ஆரிக்கு தொடர்ந்து பல வாரங்களாக ஓட்டுப் போட்டு அவரது ரசிகர்களாகவே மாறி உள்ளனர். ஆனால், ஆரி தேசத்தோடு ஒட்டி வாழவில்லை என ரம்யா கூறுவது, அவரோட வயிற்றெரிச்சல் மட்டும் தான். வெளியே வந்து இந்த வாரம் பாருங்க, அவருக்கு தேசமே சப்போர்ட் செய்கிறது என பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நல்லவனாக நடிக்கும் பாலா

நல்லவனாக நடிக்கும் பாலா

ரம்யாவை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ், துன்பம் மறந்து வாழ் என்கிற வாசகத்தை எடுத்து, இதை நான் ஆரி அண்ணாவுக்கு கொடுக்கிறேன். அவர் ஆடுற கேம் எனக்கு புடிக்காமல் இருக்கலாம், ஆனால், எந்த துன்பம் வந்தாலும் அதை மறந்து விட்டு உடனே சிரித்து வாழ்வது ஆரி அண்ணா தான் என பாலாஜி வீக்கெண்ட் நல்லவன் மோடுக்கு மாறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X