Don't Miss!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- News விளவங்கோடு விஜயதரணி.. ஆசையில்லை பேராசை..! தாமரையால் மொத்தமும் போச்சே இப்போ.. குறுக்கே வந்த ஹசீனா!
- Finance மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்.. இந்த பேங்க்கில் முதலீடுகளுக்கு அதிக வட்டி தராங்க..நோட் பண்ணுங்க!
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரம்யாவுக்கும் பாலாவுக்கும் ஒரே கொண்டாட்டம் தான் போல.. நம்புங்க ரம்யா பாலாவோட க்ளோஸே இல்லை!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவில் ரம்யாவும் பாலாவும் சந்தோஷமாக நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பாலாவுடன் தான் நட்பாக இல்லை என ஆரியிடம் ரம்யா சொல்லி சண்டையே போட்டார்.
ஆனால், கமல் சார், நீங்க பாலாவுக்குத் தான் ஃபேவரிடிசம் பண்ணுறீங்கன்னு சொல்லி நரி முகத்தை அம்பலப்படுத்தினார்.
கூட்டு சேர்ந்தாச்சு
16 பேர் இருக்கும் போது குரூபிசத்தை பேணி காப்பாற்றிய பிக் பாஸ் வீடு இப்போ வெறும் 7 பேர் இருக்கும் போதும், இரு அணிகளாக உள்ளனர். ரியோ, சோம், கேபி ஒரு அணியாகவும், பாலா, ஷிவானி மற்றும் ரம்யா ஒரு அணியாகவும் உள்ளனர். ஆரி தனி மரமாகவே தொடர்கிறார்.
தேங்க்யூ ஆரி
உங்க பிரெண்ட் பாலாவுக்குத் தான் நீங்க சப்போர்ட் பண்றீங்க என ஆரி மீண்டும் நெத்தியில அடிச்ச மாதிரி ரம்யாவிடம் சொல்ல, தேங்யூ ஆரி என நக்கலடித்து ஆரியுடன் அப்படி சண்டை போட்டார் ரம்யா பாண்டியன். ஆனால், அவரது நடவடிக்கைகளை பார்த்தாலே அவர் பாலாவுடன் நெருங்கி இருப்பது தெரிகிறது.
வெளுத்து விட்ட கமல்
யாருடனும் இந்த வீட்டில் தான் நட்பு பாராட்டவில்லை என மறுப்பு தெரிவித்த ரம்ய பாண்டியனிடம், நீங்க ஆரியை விடுத்து பாலாவுக்கு ஃபேவர் பண்ணது போலத்தான் நிகழ்ச்சியை பார்க்கும் போது தெரிந்தது என நரிப் பாண்டியனின் மாஸ்க்கை கிழித்து வெளுத்து விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
பாலாவுடன் டான்ஸ்
ஏற்கனவே ஆரியை பற்றி அர்ச்சனா கேங்குடன் இணைந்து ஆரி நீ ஒரு மாறி என பாட்டுப் பாடி சந்தோஷமடைந்த ரம்யா பாண்டியன், மீண்டும் ஆரியை குத்திக் காட்டி பாடுவதை போலவே பாலாவுடன் டான்ஸ் ஆடிக் கொண்டு, இஷ்டத்துக்கு லிரிக்ஸ் போட்டு பாடும் அன்சீன் காட்சி ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
ஆரியின் பார்வை தப்பு
சுசித்ரா இருந்த போது அவருடன் இணைந்து பாடிக் கொண்டிருந்த பாலாஜி முருகதாஸ், அடுத்து, ஆஜீத்துடன் சேர்ந்து பாடி வந்தார். இந்நிலையில், தற்போது ரம்யா பாண்டியனுடன் இணைந்து ஆடிப் பாடும் அவர், எந்த பேக்ரவுண்டும் அவங்களுக்கு இல்லை, நல்லவன், கெட்டவன் எவனுமில்லை, எல்லாம் நம்ப பார்க்கும் பார்வையால என ஆரியின் பார்வை தப்பு என்பது போல பாடி ஆடுகின்றனர். எடிட்டரும், அந்த நேரத்தில் ஆரியின் ஷாட்டை வைத்து புரமோவிலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்கிறார்.
ஆரிக்கு செக்
இதைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், அன்சீன் வரைக்கும் விஜய் டிவிக்கு ஆரி போபியா பிடித்து விட்டது. சீக்கிரமே அவரை வெளியேற்ற முடிவு பண்ணிட்டாங்க, எப்படியும் வெள்ளிக்கிழமை கடந்த வாரத்தை விட பெரிய சண்டையை கிளப்பி ஆரிக்கு அநியாயம் பண்ண போறாங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் கணித்தும் கண்டித்தும் வருகின்றனர்.