தொடத் தான் கூடாது.. மத்தபடி 4 சென்ஸ் வச்சு விளையாடலாம்.. மாஸ்டர் பிளான் போட்ட ரம்யா பாண்டியன், ரியோ!
சென்னை: எலுமிச்சை பழம், ஆரஞ்சு பழம், ஸ்ப்ரே அடிப்பது போன்ற விபரீத ஐடியாக்களை போட்டதே நம்ம ரம்யா பாண்டியன் தான்.
மொட்டை சுரேஷ் சக்கரவர்த்தியையே எவிக்ஷன் பாஸ் ரவுண்டில் கில்லாடியாக விளையாடி வெளியே அனுப்பியவர் ஆயிற்றே..
தொடாமல், மற்ற சென்ஸ்களை டார்ச்சர் பண்ணி ஜெயிக்கலாம் என்கிற யோசனையை அவர் சொன்னதும் அதை ரியோ வழி மொழிந்தார்.

சேஞ்ச் ஓவர்
நேற்று சொர்க்கபுரி அரச குடும்பத்தில் இருந்தவர்கள், இன்றைய டாஸ்க்கில் அரக்கர்களாகவும், அரக்கர்களாக இருந்தவர்கள் அரசர்களாகவும் மாறி விளையாட்டை ஆரம்பித்தனர். ஆரம்பமே அசத்தலாக இருந்தது. அதிலும், ரம்யா பாண்டியனின் மாஸ்டர் மூளை அரக்கர்கள் அணியினருக்கு பக்க பலமாக மாறியது.

செம காஸ்ட்யூம்
இளவரசியாக இருந்த போது, படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு செம கலக்கலாக ரம்யா பாண்டியன் இருந்தார். இந்நிலையில், 17வது நாள் எபிசோடில் கேபி மற்றும் ஷிவானி இளவரசிகளாக மாறி செம காஸ்ட்யூம் அணிந்து கவர்ச்சி சிலைகளாக தெரிந்தனர். அதிலும், ஷிவானி வேற லெவல் தான் போங்க

கில்லாடி ரம்யா
16ம் நாள் நிகழ்ச்சியில், மொட்டை சுரேஷ் டோப்பாவை கழட்டி மூக்குக்கு நேராக காட்டி ஹவுஸ்மேட்களை அவுட்டாக்கியதை மனதில் வைத்துக் கொண்ட ரம்யா பாண்டியன், 17ம் நாள் எபிசோடில், தொடத்தானே கூடாது, நுகர்தல், சத்தம் போன்ற 5 சென்ஸ்களை டார்ச்சர் பண்ணி ஜெயிக்கலாம் என்கிற பலே ஐடியாவை கொடுத்தார்.

உடனே சம்மதித்த ரியோ
இம்சை அரசனாக ரியோ இருந்த போது அந்த டீம் கொடுத்த டார்ச்சருக்கெல்லாம் பழி வாங்க துடித்துக் கொண்டிருந்த ரியோ ராஜ், உடனடியாக அந்த யோசனைகளை ஆமோதித்தார். ஸ்ப்ரே, ஆரஞ்சு பழம் என ஏகப்பட்ட ஐட்டங்களையும் பயன்படுத்த தொடங்கினர்.
Recommended Video

வெடித்தது சண்டை
இதனால், தான் ஏகப்பட்ட சண்டைகள் இந்த எபிசோடில் வெடிக்க ஆரம்பித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கு புரமோவை போலவே நிகழ்ச்சியும் செம காரசாரமாக சென்றது. இன்னும் என்ன ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொள்ளவில்லையே என்கிற வருத்தம் மட்டும் தான்.


Click it and Unblock the Notifications











