பிக் பாஸ் பிரபலத்துடன் ஜோடி சேர்ந்த ரம்யா பாண்டியன்.. இந்த தோட்டா சும்மா தெறிக்குதே!

சென்னை: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளர்களாக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ ராஜ் இணைந்து கலக்கப் போகும் தோட்டா ஆல்பம் பாடலின் போஸ்டர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

பிரபல யூடியூப் சேனலான Noise and Grainsல் விரைவில் தோட்டா ஆல்பம் பாடல் வெளியாக உள்ளது.

ரெட்ரோ லுக்கில் ரியோ ராஜின் தோட்டா ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், ரம்யா பாண்டியனின் அசத்தலான போஸ்டரை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ்க்கு பிறகு

பிக் பாஸ்க்கு பிறகு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாகவே ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து இருந்தார். மேலும், மம்மூட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அல்டிமேட்டில்

அல்டிமேட்டில்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பிசியாகி இருந்த ரம்யா பாண்டியன் பிக் பாஸ் அல்டிமேட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டு ஒட்டுமொத்த ஷோவின் போக்கையே கடைசி நேரத்தில் மாற்றி கலக்கினார். ஓவியா, லாஸ்லியா என பலரது பெயர் அடிபட்டு வந்த நிலையில், சர்ப்ரைஸாக ரம்யா பாண்டியன் என்ட்ரி கொடுத்தார்.

ரம்யா ராக்ஸ்

ரம்யா ராக்ஸ்

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலம் ரியோ ராஜ் உடன் ரம்யா பாண்டியன் இணைந்து ஆடியுள்ள ஆல்பம் பாடலான தோட்டா விரைவில் வெளியாக உள்ளது. ரெட்ரோ லுக்கில் ரம்யா பாண்டியன் குயின் சீட்டுக் கட்டு பேக்ரவுண்டில் அசத்தல் போஸ் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்.

ரியோ ராஜ்

ரியோ ராஜ்

முன்னதாக ரியோ ராஜ் ரெட்ரோ லுக்கில் இருக்கும் தோட்டா போஸ்டர் வெளியாகி வைரலானது. கடந்த காதலர் தினத்துக்கே இதன் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தான் ஆல்பம் பாடல் முழுமையாக ரிலீசுக்கு தயாராகி உள்ளது போல தெரிகிறது. அதற்காகத்தான் இப்படியொரு புரமோஷன் பண்ணி அதனை வெளியிடப் போகின்றனர்.

டிரெண்டிங்கில் ரம்யா பாண்டியன்

டிரெண்டிங்கில் ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியனின் தோட்டா ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், #RamyaPandian ஹாஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. கருப்பு கலர் மாடர்ன் உடையை அணிந்து கொண்டு படு மாஸாக போஸ் கொடுத்துள்ளார். ரம்யா பாண்டியனின் அழகான போட்டோக்கள் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்கள் டிரெண்டிங்கை தெறிக்கவிடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X