பத்திரத்தை பக்காவா ஆட்டையை போட்ட ரம்யா, சோம், கேபி டீம்.. பிளான் போட்ட பாலாவுக்கு பல்பு தான்!

சென்னை: பாட்டியின் பத்திரத்தை ஆட்டையை போட ஹவுஸ்மேட்களுக்கு உத்தரவு போடப்பட்டது.

குடும்ப உறுப்பினர் போர்வையில் திருடர்கள் குழுவாக வந்த சோமசேகர், ரம்யா பாண்டியன் மற்றும் கேபி டீம் பக்காவா பிளான் போட்டு பத்திரத்தை திருடினர்.

பத்திரத்தை காணாமல் பாட்டி அர்ச்சனா எல்லோர் மீதும் சந்தேக பார்வையை சுழற்ற ஆரம்பித்துள்ளார்.

பிளான் போட்ட பாலா

பிளான் போட்ட பாலா

நைட் 2 மணிக்கு எல்லாரும் தூங்கும் போது, நான் இங்க தூங்கிட்டு இருக்கேன். நான் தான் எடுக்க வருவேன்னு எல்லோருடைய கேமரா கண்களும் என்ன தான் ஃபோகஸ் பண்ணும். ஷிவானி அல்லது கேபி நீங்க ரெண்டு பேரும் மத்தவங்கள ஏமாத்திட்டு அந்த பத்திரத்தை நைட்டுக்குள்ள திருடணும் என பாலா பக்கா ஸ்கெட்ச் போட்டார்.

ரம்யாவின் ஐடியா

ரம்யாவின் ஐடியா

பாலா எப்படியும் பத்திரத்தை திருட திட்டம் போடுவான் என நினைத்த ரம்யா பாண்டியன், கேபியை அவர் டீம் போல அனுப்பி வைத்து பாலாவின் திட்டத்தை கேபி மூலமாக அறிந்து கொண்டார். அதனால், வீட்டில் பிரச்சனை முற்றிக் கொண்டு இருக்கும் பகல் நேரத்திலேயே லாவகமாக பத்திரத்தை திருடி விட்டார்.

திருட்டுப்பய சார் இந்த சோம்

திருட்டுப்பய சார் இந்த சோம்

இதுவரை பிசிக்கல் டாஸ்க்கில் மட்டுமே பர்ஃபார்ம் பண்ணிக் கொண்டிருந்த சோமசேகர், இந்த திருட்டு டாஸ்க்கிலும் நல்லாவே விளையாடி வருகிறார். நிஷாவுக்கு உதவி செய்வது போல நடித்து, ரம்யா பாண்டியன் மூலமாக பத்திரத்தை திருடி, தனது டிசர்ட்டுக்குள் நிஷா பக்கத்தில் இருக்கும் போதே அவருக்கு தெரியாமல் ஒளித்து வைத்தார்.

வாய் விட்டு மாட்டிய ரியோ

வாய் விட்டு மாட்டிய ரியோ

இந்த லாக்கர் இருக்கும் இடத்தில் யாராவது ஒருத்தர் தான் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும் என அர்ச்சனா அக்கா, குடும்ப உறுப்பினர்களை கூப்பிட்டு வைத்து சொல்லிக் கொண்டிருக்க, முதலில் பத்திரம் பத்திரமாக லாக்கரில் இருக்கா பாருங்க என ரியோ வாய் விட, அர்ச்சனா செக் செய்த போது, லாக்கரில் பத்திரம் மிஸ்ஸிங். என்னது பாட்டியோட பத்திரம் மிஸ்ஸிங்கா?

சோம் தான்

சோம் தான்

பத்திரம் காணாமல் போனதும், ஜித்தன் ரமேஷ், சோம் தான் எடுத்திருப்பான் என சரியாக கணித்தார். அதன் பின்னர், நிஷாவும், சோம் தான் பனியனுக்குள்ள எதையோ வைத்தான் என்றும் திட்டவட்டமாக சொன்னார். ஆனால், சட்டென பாலா, ரியோ, நிஷா என ஏகப்பட்ட பேர் மேல் சந்தேகத்தை ரம்யா லாவகமாக திருப்பி விட்டு சோமை காப்பாற்றினார்.

கட்டிப்பிடித்து செக் பண்ண ஷிவானி

கட்டிப்பிடித்து செக் பண்ண ஷிவானி

பாலாஜி முருகதாஸ், ரம்யா எல்லாம் நிஷா அக்கா மீது சந்தேக கண்ணை திருப்ப, உங்க டிரெஸ்ல தான் பத்திரம் இருக்கு என அவரை செக் பண்ண கிட்டே வந்தார்கள். யாராவது ஒரு பெண் போட்டியாளர் ரெஸ்ட் ரூமுக்கு வந்து செக் பண்ணிக்கோங்க என நிஷா கூறினார். ஆனால், ஷிவானி அவரை விடாமல் கட்டிப்பிடித்து செக் பண்ணினார். அய்யோ கூசுது என நிஷா அலப்பறை செய்து விட்டார்.

ஜெயிப்பார்களா

ஜெயிப்பார்களா

செம பிளான் போட்டு, ஆரிக்கும் சனம்க்கும் சண்டை நடக்கும் கேப்பை பயன்படுத்திக் கொண்டு சோமசேகர், ரம்யா மற்றும் கேபி அந்த பத்திரத்தை திருடி பெட்டுக்கு கீழ் வைத்துள்ளனர். அவங்க டீமே இந்த டாஸ்க்கில் ஜெயிக்குமா? இல்லை அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வேறு யாராவது வின் பண்ணுவாங்களா? இல்லை சொத்துக்கள் பிரித்துக் கொடுக்கப்படுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X