புதுசா ஹேர் கலர் பண்ண ஷிவானி நாராயணன்.. ரம்யா பாண்டியன் வச்ச ரெக்வஸ்ட்.. என்னன்னு பாருங்க!
சென்னை: தனது புதிய ஹேர்ஸ்டைலுடன் காபி குடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.
சீரியல் நடிகையாக வலம் வந்த ஷிவானி நாராயணன், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான போட்டோக்களை போட்டு வைரலானார்.
அதன்காரணமாக அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக பங்குபெற வாய்ப்பு கிடைத்தது.

இரண்டரை மில்லியன்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக 2 மில்லியன் ரசிகர்களை கொண்டிருந்த நடிகை ஷிவானி நாராயணன். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டரை மில்லியன் ரசிகர்களை சேர்த்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்ட ஷிவானிக்கு தினம் தோறும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக் கணக்கில் ரசிகர்கள் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த பழி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் தனது முழு பொட்டென்ஷியலையும் வெளிப்படுத்தி விளையாடவே இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. பாலாஜி முருகதாஸ் பின்னாடியே சுற்றினார் என்கிற பழியை கடைசி சில வாரங்களில் ஷிவானி நாராயணனே சூப்பராக விளையாடி போக்கினார்.

மீண்டும் பழையபடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னாடி இன்ஸ்டாகிராம் இளவரசியாக இருந்த ஷிவானி நாராயணன் மீண்டும் பழையபடி இன்ஸ்டாகிராமில் தினமும் போட்டோக்களை போட ஆரம்பித்துள்ளார். சேலையில் செம கவர்ச்சியாக இருக்கும் போட்டோவை சமீபத்தில் போஸ்ட் செய்து வைரலாக்கினார்.

ஹேர் கலரிங்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டார்பக்ஸ் காபியை கொடுக்கும் போட்டோவை பதிவிட்ட ஷிவானி நாராயணன், வாழ்க்கை ரொம்பவே சூப்பரா இருக்கு, ஒரு காபி, ஹேர் கலர் மற்றும் ஸ்டைலிங் என பதிவிட்டு லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளியுள்ளார்.

எனக்கு ஒரு காபி
ஷிவானி நாராயணன் போஸ்ட்டுக்கு கீழே கமெண்ட் செய்த பிக்பாஸ் போட்டியாளரான ரம்யா பாண்டியன், ஷிவானி எனக்கும் ஒரு கோல்டு காபி சொல்லுங்க என கமெண்ட் செய்து இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை வைரலாக்கி உள்ளார். ஷிவானியின் ரசிகர்கள், ரொம்ப அழகா இருக்கீங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

காரக் குழம்பு
ஷிவானி நாராயணன் தனது தலை முடிக்கு கலரிங் பண்ணியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், தலையில் என்ன காரக் குழம்பு கொட்டிடுச்சா, காபியை வாயில் குடிக்காமல், தலையில் கொட்டிக்கிட்டீங்களா என சில நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சிலர் உடல் எடையை குறைக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

லைவ்ல வாங்க
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வீட்டிற்கு போன ஷிவானிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது என்கிற எந்த வீடியோவும் வெளியாகவில்லை. மேலும், இதுவரை இன்ஸ்டாகிராம் லைவ்வுக்கும் ஷிவானி வரவில்லை. எந்த மீடியாவுக்கும் பேட்டியும் கொடுக்கவில்லை. சீக்கிரம் லைவ்ல வாங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications