குட்டி புஷ்கா.. என்னைய்யா டார்ச்சர் பண்ற.. விரட்டி விரட்டி வெளுத்த ரம்யா.. ஆஜீத்துக்கு அல்லு இல்லை!
சென்னை: ரோபோவாக இருந்த ரம்யா பாண்டியனை கிச்சிலிக்கா எல்லாம் மூட்டி டார்ச்சர் பண்ண ஆஜீத்தை, பஸர் அடித்ததும், விரட்டி விரட்டி வெளுத்த காட்சி சிறப்பான சம்பவம்.
சைலன்ட் கில்லர் ரோபோ என ரம்யாவுக்கு அனிதா பெயர் வைத்த நிலையில், ரம்யாவை ரொம்பவே டார்ச்சர் பண்ணது ஆஜீத் தான்.
சரியான நேரத்தில் பிக் பாஸ் பஸர் அடிக்க, ரம்யா பாண்டியன் ஆஜீத்தை போட்டு அடிக்க ஆரம்பித்து விட்டார்.

அக்கா தம்பி பாசம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகவே இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி மாறிவிட்டது. நிஷாவும் ரியோவும் ஒரு பாசமலர், பாலாவும் ஷிவானியும் ஒரு வேஷ மலர் என்று பார்த்தால், இன்னொரு பாசமலராக ரம்யா பாண்டியனும் ஆஜீத்தும் இந்த பிக் பாஸ் வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்
தம்பி ஆஜீத்தை எவிக்ஷனில் இருந்து காப்பாற்ற அக்கா ரம்யா பாண்டியன், சுரேஷ் தாத்தாவிடம் போராடி எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பெற்றுக் கொடுத்தார். ஆனால், அந்த நன்றியை மறந்து விட்டு, ரம்யா மீதே ஆஜீத்துக்கு கோபம் வந்தாலும், ஆஜீத்தை எப்போதுமே ரம்யா தம்பியகத் தான் பார்த்து வருகிறார்.

கிச்சு கிச்சு மூட்டி
பிசிக்கல் வயலன்ஸ் எல்லாம் பண்ணக் கூடாது என பாலா டீம் ரோபோவானதும் வாய் கிழிய பேச ஆரம்பித்தார்கள், ரம்யா பாண்டியன் உடனே ஆஜீத் என்னை கிச்சு கிச்சுலாம் மூட்டி தொல்லைப் பண்ணான் என்கிற உண்மையை அப்படியே போட்டு உடைத்தார். இந்த வயசுல இப்படி ஒரு வேலை பார்க்குற என ரசிகர்கள் ஆஜீத்தை விளாசி வருகின்றனர்.

பாத்ரூம் ஏரியாவில் தொல்லை
ரம்யா பாண்டியன் அதிகமாக பாத்ரூம் ஏரியாவில் தான் கார்னர் செய்யப்பட்டு டார்கெட் செய்யப்படுகிறார். முதல் நாள் எபிசோடில் பாத்ரூம் ஏரியாவில் ரம்யாவை பல் துலக்க சொல்லி ஆஜீத்தும் ஆரியும் டார்ச்சர் பண்ணார்கள். இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியிலும் ரம்யா பாத்ரூம் ஏரியாவில் இருக்கும் போது தான் ஆஜீத் தொல்லை பண்ண ஆரம்பித்துள்ளார்.

துரத்தி துரத்தி அடித்தார்
ரம்யா பாண்டியன் பாத்ரூம் போகும் போது அவரை போக விடாமல் தடுத்து ஆஜீத் டிஸ்டர்ப் பண்ணும் போது, பஸர் அடித்து அந்த ரோபோ டாஸ்க் முடிவுக்கு வந்தது. உடனே, ஆஜீத்தை துரத்தி துரத்தி அடித்து வெளுத்து விட்டார் ரம்யா பாண்டியன். எப்படி எல்லாம் எனக்கு டார்ச்சர் கொடுத்த என அவர் விரட்டி அடித்தது சூப்பர்.


Click it and Unblock the Notifications











