அந்த நம்பர் பிளேட்டை கவனிச்சீங்களா.. புதுசா BMW கார் வாங்கிய ரம்யா பாண்டியன்.. செம கெத்தாக போஸ்!

சென்னை: புதுசா வாங்கியா தனது நீல நிற BMW காருடன் போஸ் கொடுத்துள்ள ரம்யா பாண்டியன் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Ramya Pandian புது BMW Car Rajini styleல் தம்பி Parasu Pandian வாழ்த்து | Bigg Boss Tamil

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏகப்பட்ட ரசிகர்களின் ஓட்டுக்களை தட்டிச் சென்றார்.

சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடிக்கும் வாய்ப்பும் ரம்யா பாண்டியனுக்கு உடனடியாகவே கிடைத்தது.

ரம்யா காட்டில் மழை

ரம்யா காட்டில் மழை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுது வரை தாக்குப் பிடித்து ரசிகர்களின் மனங்களை வென்றவர் ரம்யா பாண்டியன். தனது சிரிப்பால் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளித்துக் கொண்டு இருந்த ரம்யா பாண்டியன் சைலன்ட் கில்லர் என்று சக போட்டியாளர்கள் மத்தியில் பெயரெடுத்தார்.

சூர்யா படம்

சூர்யா படம்

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகை வாணி போஜன் உடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் பூஜை போடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அள்ளினார்.

கடை திறப்பு விழா

கடை திறப்பு விழா

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட நகைக் கடைகளையும் புதிய கடைகளையும் திறந்து வைத்துள்ளார் ரம்யா பாண்டியன். பாலாஜி முருகதாஸ் உடன் இணைந்து ரம்யா பாண்டியன் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது ஏகப்பட்ட கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ கார்

பிஎம்டபிள்யூ கார்

இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு புதிதாக ரம்யா பாண்டியன் BMW கார் வாங்கி உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. நீல நிறத்தில் இருக்கும் அந்த கார் அருகே சும்மா கெத்தாக நின்றபடி போஸ் கொடுத்து அசத்தி உள்ளார்.

நம்பர் பிளேட்

நம்பர் பிளேட்

ரம்யா பாண்டியனை சுருக்கமாக அவரது ரசிகர்கள் RP என்று அழைத்து வருகின்றனர். இந்நிலையில், ரம்யா பாண்டியன் வாங்கி உள்ள புதிய BMW கார் நம்பர் பிளேட்டில் #RPBMW4 என்கிற எண் ஒட்டப்பட்டு இருக்கிறது. சூர்யா படத்தில் நடித்ததற்கான சம்பளம் வந்து விட்டதா என்றும் ரசிகர்கள் ரம்யா பாண்டியனிடம் ஜாலியாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X