பச்சை மிளகாய் தின்ன ஷிவானி.. ஜோக்கராக மாறிய ஆஜீத்.. எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா?

சென்னை: அடுத்த விளம்பர டாஸ்க்காக பிக் பாஸ் வீட்டில் ஃபைவ் ஸ்டார் தின்னும் போட்டி நடைபெற்றது.

கேபி, ஷிவானி, அர்ச்சனா கேமை வின் பண்ணனும் என நினைத்தனர். ஆனால், ரம்யா பாண்டியன் தான் ஷோவை இன்ட்ரஸ்ட் ஆக்கியது.

சாக்லேட் சாப்பிடும் போது அவர் டிஸ்ட்ராக்ட் ஆனால், தண்டனை அவரது டீமுக்குத்தான். அது தான் பார்க்க சூப்பராக இருந்தது.

மிக்சர் தின்பவர்களுக்கு

மிக்சர் தின்பவர்களுக்கு

பிக் பாஸ் வீட்டில் 75 நாட்களாக மிக்சர் தின்பவர்களுக்கு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் சாப்பிட கசக்குமா என்ன? கேபி, ஷிவானி எல்லாம் அழகா வந்து உட்கார்ந்து கொண்டு ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை எந்தவொரு தடையுமின்றி சாப்பிட்டு அசத்தினர். ஷிவானி சாக்லேட் சாப்பிடும் அழகை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் ஜொள்ளு விட ஆரம்பித்தனர்.

சிரிப்பழகி ரம்யா

சிரிப்பழகி ரம்யா

இடுப்பழகி ரம்யாவாக இருந்தவர், பிக் பாஸ் வீட்டில் சிரிப்பழகி ரம்யாவாக மாறி உள்ளார். மைண்ட் அங்க இருக்கக் கூடாது, கண்கள் மட்டும் தான் அங்க இருக்கணும்னு டீம் மேட்களுக்கு சொல்லி விட்டு, சாக்லேட்டை வாயில் வைத்து வீடியோவை பார்த்த அடுத்த நொடியே சிரித்து ஆட்டத்தை கெடுத்து விட்டார்.

கோழியாக ஆடிய அனிதா

கோழியாக ஆடிய அனிதா

ரம்யா சிரித்ததால் அவரது டீமில் இருந்த அனிதாவுக்கு செல்ல தண்டனை கொடுக்கப்பட்டது. கோழியாக மாறி டான்ஸ் ஆடணும் என சொன்னதும், தனது அத்தனை எக்ஸ்ட்ரா பர்ஃபார்மன்ஸ்களையும் காட்ட ஆரம்பித்தார் அனிதா சம்பத். எப்படா இந்த டாஸ்க் முடியும் என பிக் பாஸ் ரசிகர்கள் டென்ஷன் ஆனார்கள்.

ஆஜீத் ஹீத்லெட்ஜராம்

ஆஜீத் ஹீத்லெட்ஜராம்

சும்மா சாக்லேட் சாப்பிட்டு வந்தால் அந்த சீன் போரடிக்கும் என்பதை புரிந்து கொண்ட ரம்யா வேண்டுமென்றே சிரித்து சிரித்து தனது டீம் மேட்களுக்கு பனிஷ்மென்ட் வாங்கித் தந்தார். ஆஜீத்துக்கு முகத்தில் பீனட் பட்டர் பூசிக் கொள்ள வேண்டும் என தண்டனை கொடுக்கப்பட்ட நிலையில், ரம்யா அவரிடம், ஜோக்கர் மாதிரி பண்ணு என்றார். உடனே நான் ஹீத் லெட்ஜர் மாதிரி பண்ணனுமா என சீன் போட்ட ஆஜீத், ஜோக்கர் மாதிரி நடிக்கிறேன் என்கிற பேர் வழியில் நடித்து காட்டியதை பார்த்து கொலவெறியில் இருக்கிறார்கள் ஹீத்லெட்ஜர் ரசிகர்கள்.

பச்சை மிளகாய் சாப்பிட்ட ஷிவானி

பச்சை மிளகாய் சாப்பிட்ட ஷிவானி

பிக் பாஸ் வீட்டில் எது கொடுத்தாலும் சாப்பிட தான் ரெடியாக இருக்கிறேன் என மீண்டும் ப்ரூவ் பண்ணி உள்ளார் ஷிவானி. சிவாஜி படத்தில் ரஜினி சாப்பிடுவது போலவே ஒவ்வொரு பச்சை மிளகாயா எடுத்து அவர் வாயில் போட்டு சாப்பிட்டதை பார்த்த ரசிகர்கள், அவரது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். கேபி, அர்ச்சனா டீம் தான் ஃபைவ் ஸ்டார் டாஸ்க்கில் ஜெயித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X