ஓவரா ஜொள்ளு விட்ட சோம்.. சரியான பன்ச் கொடுத்து பஞ்சர் பண்ண ரம்யா.. அஜித்தை இழுத்து விட்ட பாலா!
சென்னை: வெறும் வாயில் வெத்தலை போடுறதுன்னு சொல்வாங்க, அதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்தே காட்டி விட்டார்கள்.
வெத்தலையே இல்லாமல், வெத்தல போட்டு கதை சொல்ல அர்ச்சனா பாட்டி தலைமையில் ஒட்டுமொத்த குடும்பமும் ரவுண்டு கட்டி அமர்ந்திருந்தது.
சைடு கேப்பில் சோமசேகர், ரம்யாவுக்கு ரூட் விட அவரும் போகிற கேப்பில் பெரிய ஆப்பாக அடித்து விட்டார்.

வெறும் வாயில் வெத்தலை
வெறும் வாயில் வெத்தலை போடுவாங்கன்னு சொல்வாங்க, வெத்தலையே இல்லாமல் வெறும் வாயை வைத்துக் கொண்டே பிக் பாஸ் போட்டியாளர்கள் நேற்றைய எபிசோடை எச்சில் காடாக மாற்றினார்கள். இந்த அருமையான சீனை ஆரம்பித்து வைத்த அர்ச்சனா போட்டி, பாட்டி கதை சொல்றேன்னு சொல்லிட்டு, அந்த பாட்டியே நான் தான்னு செம பிளேட் போட்டார்.

சிணுங்கிய சனம்
அர்ச்சனாவின் கதையை அப்படியே பிடித்துக் கொண்டு, பிக் பாஸ் எழுதி கொடுத்த கதையை ரியோ ராஜ் வெத்தலை போட்டவரை போல ஆக்டிங் பண்ணி சொல்லிவிட்டு, எச்சிலை சனம் மேல தடவுவது போல பாவலா பண்ணியதும், மறுபடியும் கத்தி கூச்சல் போட்டு சனம் சிணுங்க அனைவரும் சிரித்தனர்.

ஜொள்ளு விட்ட சோமசேகர்
ஏற்கனவே டாஸ்க்கில் ரம்யா பாண்டியன் இவருக்கு மனைவியாகவும், கேபி மகளாகவும் நடித்து வரும் நிலையில், பத்திரத்தை நீ ஒளிச்சுவை புதைச்சுவை.. மயிலை எனக்கு கட்டிவை என ரம்யா பாண்டியனை பார்த்து ஓவராக ஜொள்ளு விட்டதை பார்த்து எல்லாரும் சிரித்தனர்.

அவனை கொஞ்சம் வெட்டி வை
உடனடியாக கவுன்ட்டர் கொடுத்த நிஷா அக்கா, ரம்யா அவனை கொஞ்சம் வெட்டி வை என கோல் போட்டார். மறுபடியும் சோமசேகர் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். சிவந்துடுச்சா பாரு நான் இல்லை அவ மூஞ்சி என சொன்னதும், அருகே இருந்த ரம்யாவை சோமசேகரை நல்லா ஒரு கும்மாங்குத்து குத்தினார்.

வெத்துவேட்டு புருஷன்
உடனே ரம்யா பாண்டியன், என் புருஷன் சரியான வெத்து வேட்டு, என்னையும் பத்திரமா பாத்துக்க மாட்டான்.. பத்திரத்தையும் பத்திரமா பாத்துக்க மாட்டான் பேசாம தீபாவளியோட இவரை அறுத்துப் போட்டு, நானும் என் பொண்ணும் ஆஸ்திரேலியா போயிடலாம்னு இருக்கோம் என சரியான பன்ச் கொடுத்து சோமசேகர் வாலை ஒட்ட நறுக்கி விட்டார்.

அஜித் வாய்ஸ் பா
கடைசியாக ஆரி அர்ஜுனா ரொம்ப அதிகமாக பர்ஃபார்ம் பண்ணுகிறேன் என்கிற பெயரில், வெத்தலை போட்டு பேசுவதை போல இல்லாமல், ஏதோ பேசத் தெரியாதவன் போல பேசிக் கொண்டிருக்க, உடனே பாலாஜி, யப்பா அஜித் வாய்ஸ் பா என கலாய்த்தார். அஜித் ரசிகர்கள் நிச்சயம் இந்நேரம் பாலாவுக்கு சமூக வலைதளத்தில் வேட்டு வைத்துக் கொண்டு இருப்பார்கள்.


Click it and Unblock the Notifications











