twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆரியை மொத்தமாய் அசிங்கப்படுத்திய ரம்யா.. மனசுல உள்ளதையெல்லாம் கொட்டித்தீர்த்தாச்சு போங்க!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் குறை சொல்லும் டாஸ்க்கில் ஆரியின் குறைகள் என யோசிச்சு யோசிச்சு கூறி மொத்தமாய் அசிங்கப்படுத்தினார் ரம்யா பாண்டியன்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே என பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதில் நேற்றைய எபிசோடில் வளையத்துக்குள் பந்தை போட்டு சுற்றும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குறை சொல்லும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

    ரியோவின் குறைகள்

    ரியோவின் குறைகள்

    இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யார் நல்லவன் என்ற மாஸ்க்குடன் உள்ளார் என்பதை விளக்கும் வகையில் சக போட்டியாளர்களின் குறைகளை சொல்ல வேண்டும். அந்த வகையில் போட்டியாளர்களின் குறைகளை கூற ஆரம்பித்த ரம்யா, முதலில் ரியோ குறித்து பேசினார். ரியோ கன்ஃபியூஷனில் இருப்பார். நினைப்பது ஒன்று சொல்வது ஒன்றாக இருக்கும் என்றார்.

    சோம் வெளிப்படுத்தவில்லை

    சோம் வெளிப்படுத்தவில்லை

    அடுத்து சோம் குறித்து பேசிய ரம்யா, சோமுக்கு ஆரி மீது கோபம் இருந்துள்ளது. அதை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த கோபத்தை அப்போதே வெளிப்படுத்தவில்லை என்பதுதான் குறை என்று கூறி முடித்தார்.

    பழிக்கு பழி..

    பழிக்கு பழி..

    அடுத்து ஷிவானி குறித்து பேசிய ரம்யா, ஷிவானி கம்ஃபர்ட் ஸோனிலேயே இருக்கிறார் என்றார். தொடர்ந்து கேபி குறித்து பேசிய ரம்யா, கேபி டாஸ்க்ல கோபத்தை காட்றாங்க என்றும் கூறினார். அடுத்த பாலாஜி குறித்து பேசிய ரம்யா, அவருக்கு பழிக்கு பழி வாங்கும் எண்ணம் இருப்பதாக கூறினார். மேலும் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

     வார்த்தை விட்டிருக்கிறீர்கள்

    வார்த்தை விட்டிருக்கிறீர்கள்

    அடுத்து ஆரி குறித்த பேச ஆரம்பிரத்தார் ரம்யா. அப்போது ஆரி ஒரு ஸ்டைலில் நீங்கள் விளையாடினால் அதே ஸ்டைலில் மற்றவர்களையும் விளையாடணும்னு எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் ஸ்டைலை மற்றவர்கள் மீது திணிக்க பார்க்கிறீர்கள். மற்றவர்களை கோவத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறும் நீங்கள் எத்தனை இடத்தில் வார்த்தை விட்டிருக்கிறீர்கள் என்று பார்க்க வேண்டும் என்றார்.

    குறையை பார்ப்பது பிளஸா?

    குறையை பார்ப்பது பிளஸா?

    நீங்கள் எத்தனை இடத்தில் நியாயமா இருந்திருக்கிறீர்கள் என்பதையும் பார்க்க வேண்டுட். மத்தவங்கக்கிட்ட குறையை பாக்குறத நீங்க உங்க பிளஸ்ஸா பார்க்குறீங்க, அதையே நம்புறீங்க. நீங்க பேசும் வார்த்தைகள் நியாமான்னு உங்களையே நீங்க கேட்டிருக்கணும்.. எங்கேயோ பேசின ஒரு விஷயத்தை கொண்டு வந்து பேசி மத்தவங்க வாயை அடைக்கணும்னு நினைக்கறீங்க.

     நியாயம்னு நம்புறீங்க

    நியாயம்னு நம்புறீங்க

    ஹேப்பினஸ், பாஸிட்டிவ் வைப்ஸும் பார்ட் ஆஃப் த கேம்ன்னு நான் நினைக்கிறேன். இல்ல நீங்க நினைக்கிற மாதிரி வாழ்க்கை அல்லது சமூக பிரதிபலிப்பு என்பதை என்னைக்காவது உங்கள பார்த்து கேட்டிருக்கீங்களா? மேலும் நீங்க சொல்றதுதான் நியாயம்னு நீங்க நம்புறது ஓ கே ஆனா அதையே மத்தவங்களை நம்ப வைக்கிறது. எந்த விதத்தில் நியாம். அதுவும் ஒரு பெரிய குறையாதான் பார்க்கிறேன்.

    மக்களை இன்ஃபுளுயன்ஸ் பண்றீங்க

    மக்களை இன்ஃபுளுயன்ஸ் பண்றீங்க

    இங்க உள்ள குரூப்புல ஒருத்தர் 5 பேர இன்ஃபுளுயன்ஸ் பண்றாங்க, ஒருத்தர் 3 பேர இன்ஃபுளுயன்ஸ் பண்றாங்கன்னு சொல்றீங்க. ஆனா நான் ஏன் சொல்லக்கூடாது நீங்க பல கோடி மக்களை இன்ஃபுளுயன்ஸ் பண்றீங்கன்னு. நான் இன்ஃபுளுயன்ஸ பண்ணியது இல்லை. ஆனா நீங்க இன்டென்ஷனலா பண்றீங்கங்றது என் ஒப்பினியன்.

    பேக்கேஜ் வச்சுருக்கீங்க..

    பேக்கேஜ் வச்சுருக்கீங்க..

    நீங்க எல்லாத்தையும் சொல்லிட்டு ஞாபக சக்தின்னு சொல்றீங்க. ஆனா ஞாபக சக்தியும் பேக்கேஜூம் வேற. நான் சொல்வேன் நீங்க 100 சதவீதம் பேக்கேஜ் வச்சுருக்கீங்கன்னு. எந்த இடத்துல எதை சொன்னாலும், ஆழ் மனசுலேருந்து பேசுறீங்க, அது ஞாபக சக்தியால வர வார்த்தை இல்லை. மத்தவங்க குறையை பார்க்குறத ஒரு டேலன்ட்டா நீங்க பார்க்குறீங்க அதை தாண்டி இங்க பல விஷயங்கள் இருக்கு என்று முடித்தார்.

    யோசிச்சு.. யோசிச்சு..

    யோசிச்சு.. யோசிச்சு..

    ஆரி மீது உள்ள கோபத்தையெல்லாம் கொட்டித்தீர்த்தார். மற்ற ஹவுஸ்மேட்ஸ் பற்றி ஓரிரு வார்த்தையில் பேசி முடித்த ரம்யா, ஆரி பற்றி மட்டும் நீண்ட நேரம் பேசினார். யோசிச்சு யோசிச்சு என்னவெல்லாம் தோனியதோ அனைத்தையும் கூறி அசிங்கப்படுத்திவிட்டார்.

    ரம்யாவை ஆதரித்த ரியோ

    ரம்யாவை ஆதரித்த ரியோ

    ரம்யா பேசிய பேச்சில் ஆரியின் முகமே மாறிவிட்டது. ரம்யா பேசும் போது ரியோவும் அவரது குற்றச்சாட்டுக்களை ஆதரிப்பது போல் நெஞ்சில் கையை வைத்து மற்றவர்களை பார்த்து தலையை ஆட்டினார்.

    பாயாசம் உங்களுக்குதான்

    பாயாசம் உங்களுக்குதான்

    ரம்யா பேசியதை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா பேசுவதில் பெரும்பாலும் அவரைப்பற்றியே பேசுவதை போன்று உள்ளது. பல இடங்களில் ஆரியை பற்றி சக ஹவுஸ்மேட்ஸிடம் பேசி, ஆடியன்ஸை அவர் இன்ஃபுளுயன்ஸ் செய்கிறார் என்றும், இப்போது ஆரி மீது குறைகளை சொல்லி மீண்டும் ஆடியன்ஸை இன்ஃபுளுயன்ஸ் செய்கிறார் என்றும் விளாசி வருகின்றனர். மேலும் பாயசம் உங்களுக்குதான் என்றும் கூறி வருகின்றனர்.

    English summary
    Ramya Pandian Damaged Aari totally in the mask task. She listed many accusations on Aari.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X