வாரேவா.. பிக் பாஸை தொடர்ந்து வெப்சீரிஸ்.. கலக்குறாரே நம்ம தலைவி ரம்யா பாண்டியன்.. ரிலீஸ் எப்போ?

சென்னை: ஜோக்கர் படம் மூலமாக பிரபலமான ரம்யா பாண்டியன். இப்போ வெப்சீரிஸ் பக்கமும் அடியெடுத்து வைத்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே தலைவியாக மாறி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தியின் கேம் பிளானை சுக்குநூறாக உடைத்து தான் எப்பவுமே கெத்து என நிரூபித்து பாராட்டுக்களை அள்ளினார்.

அண்ணா யூனிவர்சிட்டி மாணவி

அண்ணா யூனிவர்சிட்டி மாணவி

திருநெல்வேலியை சேர்ந்த ரம்யா பாண்டியன், அண்ணா பல்கலைக் கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். அது தொடர்பான வேலையை செய்து கொண்டிருந்த போது, மணிரத்னத்தின் உதவி இயக்குநர் இயக்கிய மானே தேனே பொன்மானே குறும்படத்தில் நடித்த இவர், அதன் பிறகு சினிமாவில் அறிமுகமானார்.

பாம்பு கடித்து அப்பா இறந்துட்டாரு

பாம்பு கடித்து அப்பா இறந்துட்டாரு

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், பாம்பு கடித்து தனது அப்பா இறந்து விட்டார் என்று கதை சொல்லும் டாஸ்க்கின் போது சொல்லி ரசிகர்கள் அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தினார். அதன் பிறகு குடும்பத்தை எடுத்து நடத்தும் பொறுப்பு தன் மேல் விழுந்ததால், சத்யம் தியேட்டர் வாசலில் பேம்ப்ளட் கொடுக்கும் வேலை எல்லாம் செய்தேன் என்றார்.

சித்தப்பா அருண் பாண்டியன்

சித்தப்பா அருண் பாண்டியன்

ஊமை விழிகள், இணைந்த கைகள் என கோலிவுட்டை ஒரு காலத்தில் கலக்கு கலக்கென கலக்கிய நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான் ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், தனது சித்தப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து ஹேண்ட்ஸம் சித்தப்பா என்று பதிவிட்டு வைரலாக்கினார்.

தேசிய விருது படம்

தேசிய விருது படம்

இயக்குநர் ஒ.எஸ். ரவி இயக்கத்தில் வெளியான டம்மி டப்பாசு படத்தில் ஹீரோயினாக ரம்யா பாண்டியன் அறிமுகமானார். ஆனால், அந்த படம் சரியாக ஓடவில்லை. அதனை தொடர்ந்து, இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில், சோம சுந்தரம் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ஜோக்கர் படத்தில் நாயகியாக ரம்யா பாண்டியன் நடித்து பிரபலமானார்.

தலைவி கலக்குறாரு

தலைவி கலக்குறாரு

டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை என சில படங்களில் நடித்தாலும், ரம்யா பாண்டியன் பெரிதாக ஷைன் ஆகவில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டார். இடுப்பு போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் செம கெத்து காட்டி வருகிறார் தலைவி ரம்யா பாண்டியன்.

வெப்சீரிஸ் பக்கம்

வெப்சீரிஸ் பக்கம்

சினிமா, சமூக வலைதளம், பிக் பாஸ் என கலக்கி வரும் நடிகை ரம்யா பாண்டியன், இனி ஒடிடி தளத்திலும் கலக்க உள்ளார். இயக்குநர் ஸ்ரீராம் ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள 'முகிலன்' எனும் வெப்சீரிஸில் நடித்துள்ளார் ரம்யா பாண்டியன். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளதாம்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

ஜி5 ஒடிடி தளத்தில் வரும் அக்டோபர் 30ம் தேதி ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘முகிலன்' வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. இந்த வெப்சீரிஸுக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிக் பாஸில் மட்டுமின்றி ரம்யா பாண்டியனை ரசிகர்கள் வெப்சீரிஸிலும் கண்டு ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X