இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஓவியா, லாஸ்லியான்னு சொன்னாங்க.. ஆனால், வந்திருக்கிறது யாரு தெரியுமா?
சென்னை: சிம்பு ஹோஸ்ட்டாக வந்ததில் இருந்தே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வேற லெவலில் மாறிவிட்டது.
பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி என்டர்டெயின் செய்து வருகிறது.
ஆனால், இந்த சீசனில் ரசிகர்களை கவரும் விதத்தில் இப்போதைக்கு பெண் போட்டியாளர்கள் இல்லை என்கிற குறையை ரசிகர்கள் முன் வைத்து வந்த நிலையில், பல முன்னாள் பெண் போட்டியாளர்களிடமும் பிக் பாஸ் டீம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ரம்யா பாண்டியன் தற்போது வைல்டு கார்டு என்ட்ரியாக சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

ஓவியா வருவதாக
நடிகை ஓவியா பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் டிஆர்பியை உச்சத்துக்கு கொண்டு சென்றார். பிக் பாஸ் அல்டிமேட் ஆரம்பித்ததில் இருந்தே ஓவியா கண்டிப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியாக ஓவியா போட்டியாளராக கலந்து கொள்ளாதது ரசிகர்களை ஏமாற்றியது. வைல்டு கார்டாகவாவது அவர் வருவார் என இன்னமும் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லி வருகின்றனர்.

லாஸ்லியாவும் இல்லையா
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு ஹோஸ்ட்டாக வந்த நிலையில், இளம் பெண் போட்டியாளர்கள் இல்லை என்றால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே இருக்கதே என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், லாஸ்லியா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறார் என தகவல்கள் பரவின. ஆனால், தற்போது லாஸ்லியாவுக்கு பதில் வேறு ஒரு சூப்பரான பெண் போட்டியாளர் உள்ளே நுழைந்திருக்கிறார்.

ஏற்கனவே இரண்டு பேர்
பிக் பாஸ் அல்டிமேட்டில் ஆரம்பத்திலேயே வெளியேறிய சுரேஷ் தாத்தா வேற எந்த ஷோவும் கிடைக்காத நிலையில், மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டுக்கே ரிட்டர்ன் ஆகி உள்ளார். மேலும், இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத கேபிஒய் சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக பங்கேற்று இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், மூன்றாவதாக ஒரு வைல்டு கார்டு உள்ளே அதகளமாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

சிரிப்பழகி வந்துட்டாங்க
பிக் பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் சுரேஷ் தாத்தா கையில் உள்ள வாளை வைத்து குத்த டோர் திறந்ததும் செம சூப்பராக நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் கலக்கலான புரமோவை தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது.

இந்தவாட்டி மிஸ் ஆகாது
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் கடைசி வரை போட்டியில் சிங்கப்பெண்ணாக கலக்கினார். கிராண்ட் ஃபினாலே வரை வந்தும் அவர் டைட்டில் வெல்லாத நிலையில், இந்தவாட்டி மிஸ் ஆகாது என அவரது தம்பி பரசு போட்டிருக்கும் சமூக வலைதள போஸ்ட் ஏற்கனவே ரம்யா பாண்டியன் வீட்டிற்குள் வர போகிறாரா? என்கிற கேள்வியை கிளப்பிய நிலையில், தற்போது சிரிச்சிக்கிட்டே ஊசி போடும் ரம்யா பாண்டியன் உள்ளே நுழைந்திருக்கிறார். இந்த முறை டைட்டிலை ரம்யா பாண்டியன் தட்டிப் பறிப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











