For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிரிக்கும் சிங்கம்.. ரம்யா பாண்டியனை வாழ்த்திய கமல்.. கலக்கலா உள்ளே போய் கூட்டிட்டு வந்த கவின்!

    |

    சென்னை: சோமசேகரை தொடர்ந்து அடுத்ததாக ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆனார்.

    பிக் பாஸ் தமிழ் 3வது சீசனில் பெட்டியை தூக்கிக் கொண்டு எஸ்கேப்பான கவின் மீண்டும் கெத்தாக வீட்டுக்குள் நுழைந்து, ரம்யா பாண்டியனை எவிக்ட் செய்த விதம் சூப்பர்.

    கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததை அறிந்து கொண்ட அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை உருவாக்கி தெறிக்கவிட்டனர்.

    சிரி ரியோ.. எல்லோரையும் ஹேப்பி பண்ணிட்டு வரணும்.. ஆர்டர் போட்ட ஸ்ருதி.. கமலுடன் உரையாடிய ரியா!

    சீக்கிரமே ரிலீஸ்

    சீக்கிரமே ரிலீஸ்

    பிக் பாஸ் வீட்டுக்குள் முகேன் ராவை தொடர்ந்து நுழைந்த கவின் கமல்ஹாசனிடம் பேசினார். என்ன பண்றீங்க என கமல் கேட்க, லிப்ட்ன்னு ஒரு படம் பண்ணியிருக்கேன். லாக்டவுனுக்கு முன்னாடியே ஷூட்டிங் முடிந்து விட்டது. சீக்கிரமே ரிலீசுக்கு ரெடியாகிட்டு இருக்கு சார் என்றார். உங்களை பார்ப்பதே ரொம்ப சந்தோஷம் சார் என்றார்.

    மாஸ்டர் பாட்டுக்கு

    மாஸ்டர் பாட்டுக்கு

    உங்களுக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு, அடுத்த ஆளை எவிக்ட் பண்ணனும்னு கமல் உத்தரவு போட, பிக் பாஸ் வீட்டுக்கு மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டே உள்ளே சென்ற கவின், ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் நடனம் ஆட வைத்து மகிழ வைத்தார்.

    பேப்பர் சீக்ரெட்

    பேப்பர் சீக்ரெட்

    செய்தித் தாளை பல பாகங்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் ஒளித்து வைத்து விட்டு ஹவுஸ்மேட்களை கண்டுபிடிக்கும் கேமை கொடுத்தார் கவின். செய்தித்தாள் பாகங்கள் கிடைத்த பிறகு அதனை ஒன்று சேர்க்க, அதில் ஒரு பாகம் மட்டும் மிஸ்சிங். கடைசியாக ரம்யாவை ஸ்டோர் ரூமில் இருந்து எடுக்க சொன்னார் பிக்பாஸ்.

    ரம்யா பாண்டியன் எவிக்ட்

    ரம்யா பாண்டியன் எவிக்ட்

    அந்த பேப்பரில் இருந்ததை படித்த ரம்யா பாண்டியன் தான் எவிக்ட் ஆனதை அறிந்து கொண்டார். பின்னர், மற்ற ஹவுஸ்மேட்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் சொல்லிக் கொண்டு பிக் பாஸிடமும் நன்றி தெரிவித்தார். ஸ்வீட்டா ஏதாவது சொல்லுங்க பிக் பாஸ் என்றதும், ரம்யாவை கலாய்க்கும் விதமாக லட்டு, அல்வா, ஜாங்கிரி என பேசி கலாய்த்தார்.

    ரம்யாவுக்கு சல்யூட்

    ரம்யாவுக்கு சல்யூட்

    ரம்யாவை வாழ்த்திய ஆரி, பாலா மற்றும் ரியோ அவருக்கு ராயல் சல்யூட் அடித்து வழியனுப்பினர். கவினுடன் கமல் இருக்கும் கிராண்ட் ஃபினாலேவின் மேடைக்கு செம க்யூட்டாக வந்தார் ரம்யா பாண்டியன். தனது குடும்பத்தினரிடமும், கமல் சாரிடமும் பேசி மகிழ்ந்தார்.

    சிரிக்கும் சிங்கம்

    சிரிக்கும் சிங்கம்

    வெளியே வந்த ரம்யா பாண்டியனுக்கு சிங்கப்பெண் ரம்யா பாண்டியன் என்கிற ஷீல்டை கமல் கொடுத்தார். பின்னர், சிரிக்கும் சிங்கம் என்றும் ரம்யா பாண்டியனை கமல் வெகுவாக பாராட்ட, கமலுக்கும் தனக்கு ஓட்டுப்போட்டு இறுதிச்சுற்று வரை கொண்டு வந்த ரசிகர்களுக்கும் நன்றிக் கூறினார் ரம்யா பாண்டியன். ஆல் தி பெஸ்ட் ரம்யா!

    English summary
    Ramya Pandian evicted from Bigg Boss Tamil 4, Kavin done his job given by host Kamal Haasan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X