twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்ணீர் சிந்தாமல் கன்ஃபெஷன் ரூமில் பேசிய ரம்யா.. குவிகிறது பாராட்டு.. அதுக்கு வாய்ப்பு இருக்கா?

    |

    சென்னை: ரம்யா பாண்டியன் கன்ஃபெஷன் ரூமிற்குள் பிக் பாஸுடன் நடத்திய உரையாடல் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

    இந்த வாரம் முழுக்க கன்ஃபெஷன் ரூமில் போட்டியாளர்களை அழைத்து கலங்க வைத்து அனுப்பினார் பிக் பாஸ்.

    ஆனால், கன்ஃபெஷன் ரூமில் தேவையில்லாமல் கண்ணீர் சிந்தாமல், பிக் பாஸிடம் சிரித்துக் கொண்டு செம ஜாலியாக பேசிய ரம்யாவை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    ஜாலி பேச்சு

    ஜாலி பேச்சு

    இன்றைய எபிசோடில் கேபியை தொடர்ந்து ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி முருகதாஸ் கன்ஃபெஷன் ரூமிற்கு சென்றார்கள். ரம்யா பாண்டியன் ஜாலியாக கன்ஃபெஷன் ரூமிற்கு சென்ற ரம்யா பாண்டியன், ஜாலியாக பிக் பாஸிடம் பேசிவிட்டு வெளியேறியது ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளியது.

    கண்ணீர் சிந்தவில்லை

    கண்ணீர் சிந்தவில்லை

    கன்ஃபெஷன் ரூமில் பேசினாலும் கேமரா நம்மை படம் பிடித்துக் காட்டும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், கன்ஃபெஷன் ரூமில் பிக்பாஸ் பேசும் போது ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல், அந்த டிராமாவுக்கு வாய்ப்பு தராமல் கூலாக பேசிவிட்டு வெளியேறினார்.

    பிளட் ரிலேஷன்

    பிளட் ரிலேஷன்

    இந்த பிக் பாஸ் வீட்டில வாழ்க்கை, கோபம், அழுகை, சக போட்டியாளர்கள் என ஒவ்வொரு கேள்வியாக ரம்யாவிடம் பிக் பாஸ் கேட்க, அதற்கு பதில் அளித்து வந்த ரம்யா பாண்டியன், கடைசியாக சக போட்டியாளர்கள் குறித்த கேள்விக்கு ரத்த சொந்தத்தை போலவே, இங்கே வரும் போட்டியாளர்களையும் நாம சூஸ் பண்ண முடியாது வருபவர்களிடம் பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.

    எஸ்கேப்பான பிக்பாஸ்

    எஸ்கேப்பான பிக்பாஸ்

    அதன் பிறகு பிக் பாஸிடம் ரம்யா கேள்வி கேட்க முனைந்தபோது, அதற்கு இடம் கொடுக்காமல் நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவில்லையே என பிக் பாஸ் கேட்க, மீண்டும் சிரித்து ஏமாற்றி விட்டு ரம்யா பாண்டியன் வெளியேறினார். கடைசி வரை அழ கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ரம்யா.

    பேச்சை குறைக்கலாமே

    பேச்சை குறைக்கலாமே

    இந்த சீசனில் பிக் பாஸ் ரொம்பவே ஜொள்ளு பார்ட்டியாக இருக்கிறார் என்றும், அடிக்கடி பெண் போட்டியாளர்களிடம் மட்டுமே பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஷிவானி அழும்போது அழகா இருக்கீங்க என்றும், ரம்யா பாண்டியன் தொப்புளை காட்டியதும் லுக்கிங் நைஸ் என கமெண்ட் அடித்ததையும் பார்த்த நெட்டிசன்கள், பிக் பாஸ் நீங்க கொஞ்சம் பேச்சை குறைத்தால் நல்லா இருக்கும் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

    அதுக்கு வாய்ப்பிருக்கா?

    அதுக்கு வாய்ப்பிருக்கா?

    இதுவரை ரம்யா பாண்டியன் பெரிய பிரச்சனைகள் ஏதும் செய்யாமல், சேஃப் கேம் ஆடி வருகிறார். கேப்டன் பதவி கிடைத்தால், அந்த வாரம் அனைவரது பாராட்டுக்களையும் அள்ளி விடுகிறார். ஹர்ட் பண்ண வேண்டும் என்றாலும், சிரித்துக் கொண்டே ஹர்ட் பண்ணுவதால், சாஃப்ட் ஹர்ட் என்கிற பட்டப்பெயரை பெற்றுள்ள ரம்யாவுக்கு பிக் பாஸ் டைட்டில் கிடைக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    சான்ஸ் இருக்கு

    சான்ஸ் இருக்கு

    முதல் சீசனில் ஆரவ், இரண்டாம் சீசனில் ரித்விகா, மூன்றாம் சீசனில் முகேன் ராவ் டைட்டில் வின் பண்ணதால், 4ம் சீசனில் பெண் போட்டியாளர் ஒருவர் தான் டைட்டில் வின் பண்ணுவார் என்கிற கணிப்பும் பரவி வருகிறது. அப்படி பார்த்தால் ரம்யா டைட்டில் அடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    English summary
    Ramya Pandian face Bigg Boss with a smiling face in confession room. Bigg Boss fans guessing Ramya Pandian will won the title this season.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X