செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்!
சென்னை: பிக்பாஸில் இருந்து திரும்பிய நடிகை ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் மேளதாளம் முழங்க மாஸாக வரவேற்பு கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

குக்கு வித் கோமாளி
இதில் இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆனார். அதனை தொடர்ந்து கலக்கப்போவது யார் சீசன் 9 ல் ஜட்ஜ்ஜாக பங்கேற்றார் ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியன் சினிமா இயக்குநர் துரை பாண்டியனின் மகளும் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகளும் ஆவார்.

விஷமத்தனமான வேலைகள்
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சிரித்தப்படியே விஷமத்தனமான வேலைகளை செய்வதாக ரம்யா பாண்டியன் மீது விமர்சனங்கள் எழுந்தது.

பட்டப் பெயர்கள்
குறிப்பாக சக போட்டியாளர்கள் குறித்து பின்னால் பேசுவது, ஆரியிடம் மல்லுக்கு நிற்பது, மற்றவர்களை ஆரிக்கு எதிராக ஏற்றிவிடுவது என இருந்து வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் விஷம், விஷப் பூச்சி, பாய்சன் என கன்னாபின்னாவென கழுவி ஊற்றினர்.

சோம் மீது சாஃப்ட் கார்னர்
இருந்த போதும் ஆரி தவறானவர் என்று காட்ட வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் வீட்டில் அதிகம் மெனக்கெட்டார் ரம்யா பாண்டியன். இதனிடையே ரம்யா பாண்டியனுக்கு சக போட்டியாளரான சோம சேகருக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது.

முதல் நாளே சாக்லேட்
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற முதல் நாளே சோம சேகருக்கு சாக்லேட்டை கொடுத்த ரம்யா பாண்டியன், பாஸிட்டிவான விஷயங்கள் அனைத்திற்கும் அவரது பெயரையே நாமினேட் செய்து தனது அன்பை வெளிப்படுத்தி வந்தார். சோம சேகரை கேப்டனாக்கவும் முயற்சி செய்தார் ரம்யா பாண்டியன்.

ரம்யாவுக்கு கவர்
இதனால் சோம் மீது ரம்யா பாண்டியனுக்கு காதல் என்றும் பேசப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக சென்ற போது ரம்யா பாண்டியன் தனக்கு கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டு அந்த கவரை ரம்யாவுக்கு கொடுத்தார் சோம்.
Recommended Video

மேளதாளம் முழங்க
அதையும் வித்தியாசமான கிஃப்ட் என பத்திரப்படுத்தி வைத்தார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்து விட்டு 4வது போட்டியாளராக வெளியேறிய ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளனர்.

பட்டாசு வெடித்து
செண்டை மேளம் முழங்க பட்டாசு வெடித்து மாலை அணிவித்து குத்தாட்டம் போட்டு ரம்யாவை வேற லெவலில் வரவேற்றனர் குடும்பத்தினர். மேலும் சிங்கப் பெண் என்று எழுதப்பட்ட கேக்கை வெட்டியும் சிங்கப் பெண் பாடலை ஒலிபரப்பியும் கொண்டாடினர்.

சிங்கப் பெண் தான்
அம்மா, தம்பி, அக்கா மற்றும் உறவினர்கள் என குடும்பமே கொண்டாடியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், சிங்கப்பெண் தான்.. ஆனால் ஆரியிடம் அப்படி நடந்திருக்க கூடாது என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











