இந்த ஒரு விஷயத்துக்காகவே ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் தமிழ் 4 டைட்டிலை இப்பவே தூக்கி கொடுக்கலாம்!

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போது ஆளுக்கொரு செடி கொடுக்கப்பட்டது.

அதற்கு பிறகு, அந்த செடி என்ன ஆச்சுன்னே காட்டல. வீட்டை விட்டு வெளியேறும் பிரபலங்களும், செடியை பராமரிக்க இன்னொரு நபரை நியமிக்க வேண்டும். ஆனால், அதையும் செய்யல..

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டு செடிகளை எல்லாம் தன் பிள்ளையை போல பார்த்து பராமரித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

பிக் பாஸ் தந்த முதல் பரிசு

பிக் பாஸ் தந்த முதல் பரிசு

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் ஏகப்பட்ட பரிசுகளை போட்டியாளர்கள் அலைந்து கொண்டும், ஆர்பரித்துக் கொண்டும் போட்டி போட்டுக் கொண்டும் வாங்கி பத்திரப்படுத்தி வருகின்றனர். ஆனால், அறிமுக நிகழ்ச்சியில், அவர்களுக்கு கொடுத்து அனுப்பப்பட்ட முதல் பரிசான செடிகளை யாரும் கண்டுக்கவே இல்லை.

ஆரி கூட

ஆரி கூட

விதை நெல்லை சேகரித்து கின்னஸ் சாதனை எல்லாம் வாங்கிய ஆரி அர்ஜுனா கூட பிக் பாஸ் வீட்டில் செடிகளை பராமரிக்காமல் பட்டுப் போக செய்து விட்டார். நிச்சயம் ரசிகர்களுக்கு அவரது இந்த செயலுக்காக பாராட்ட மாட்டார்கள், ஜித்தன் ரமேஷ் அதுக்கு கொடுத்த ரியாக்‌ஷனே அவருக்கு சரியான சவுக்கடி தான்.

மிக்சர் தின்னத் தான் லாயக்கு

மிக்சர் தின்னத் தான் லாயக்கு

பிக் பாஸ் வீட்டில் பொறுப்பா தங்களுக்கு கொடுத்த ஒரு சின்ன செடியை பார்த்துக்கவே தகுதி இல்லாதவர்கள் எப்படி குடும்பத்தை பார்த்துப்பாங்கன்னு சுத்தமா தெரியவே இல்லை. அதிலும் ஷிவானி நாராயணன் வெறும் காலி டப்பாவை காட்டியதை பார்த்து கமலே கடுப்பாகி விட்டார். வெறும் மிக்சர் தின்னத் தான் லாயக்கு போல என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

நீ வேற லெவல்மா

நீ வேற லெவல்மா

தனக்கு கொடுக்கப்பட்ட செடிகளை மட்டுமின்றி, பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் கவனிக்காத செடிகளையும், தன் குழந்தைகளாகவே நினைத்து வளர்த்து வருகிறார் ரம்யா பாண்டியன் என்பதை நேற்றைய ஷோவில் ரிவீல் பண்ண நிலையில், மற்ற போட்டியாளர்கள் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ரம்யாவை பாராட்டினார்கள். நீ வேற லெவல்மா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் டைட்டில்

பிக் பாஸ் டைட்டில்

ரம்யா பாண்டியன் இதுவரை பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு பெரிய சண்டையையோ பிரச்சனையையோ உருவாக்கவில்லை. சிரித்துக் கொண்டே அனைவரிடமும் அன்பாக பழகுகிறார். வாதாட வேண்டுமென்றாலும், பாயின்ட்டுகளை மட்டுமே பேசுகிறார். எல்லாவற்றுக்கும் மேல், மற்ற போட்டியாளர்கள் கவனிக்க மறந்த அத்தனை செடிகளையும் அரவணைக்கும் உள்ளம் இருக்கே அதற்காகவே, பிக் பாஸ் தமிழ் 4 டைட்டிலை அவருக்கு கொடுக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சூப்பர் ரம்யா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X