பார்பி ஃபீவர் இன்னும் ஓயலையா.. பிங்க் கோட் சூட்டில் கெத்துக் காட்டும் ரம்யா பாண்டியன்.. நச் பிக்ஸ்!

சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன் பிங்க் நிற கோட் சூட்டில் செம கெத்தாக போஸ் கொடுத்த போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட்டில் வெளியான பார்பி திரைப்படத்தின் தாக்கமாக பல நடிகைகள் பிங்க் நிற உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது ரம்யா பாண்டியனும் அந்த டிரெண்டில் இடம்பெற்றுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Ramya Pandian gives a perfect barbie look treat for her fans

பார்பி பொம்மை: தனது சிரிப்பாலே ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் தேசிய விருது வென்ற ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் அந்த ஷோக்கு பிறகு சூர்யா தயாரிப்பில் ராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில் நடித்திருந்தார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நன்பகல் நேரத்து மயக்கம் படத்திலும் நடித்திருந்தார்.

Ramya Pandian gives a perfect barbie look treat for her fans

இன்ஸ்டாகிராமில் நடிகர் ரம்யா பாண்டியனுக்கு 2.7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். அடிக்கடி கவர்ச்சிகரமாக எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர் ஆர்மியை டெவலப் செய்து வரும் ரம்யா பாண்டியன் பார்பி பொம்மை போல கோட் சூட்டில் கூலாக இருக்கும் போட்டோக்களை தற்போது அடுக்கி இணையத்தை அனல் ஆக்கி வருகிறார்.

பிங்க் கோட் சூட்டில் பக்கா: கட்டுக்கடங்காத கட்டழகை காட்டி காளையர்களை கவிழ்த்து வரும் ரம்யா பாண்டியனுக்கு எப்போது திருமணம் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் ரம்யா பாண்டியனின் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் இளம் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்த நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் இந்த கேள்வியை எழுப்பி டார்ச்சர் செய்து வருகின்றனர்.

Ramya Pandian gives a perfect barbie look treat for her fans

33 வயதாகும் ரம்யா பாண்டியன் தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், இப்போதைக்கு குடும்ப வாழ்வில் சிக்க மாட்டார் என்றே தெரிகிறது. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு பிக் பாஸ் பிரபலமான ஆஜித் காலிக் உள்ளிட்ட சிலர் லைக் போட்டுள்ளனர்.

Ramya Pandian gives a perfect barbie look treat for her fans

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ஷேர் செய்து எங்கள் தலைவி என்னம்மா அழகா இருக்காரு பாருங்க என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X