இந்த வாரம் ஆரி தான் வெளியே போவாரு.. அனிதாவிடம் ரகசியம் பேசும் ரம்யா.. வைரலாகும் அன்சீன்!
சென்னை: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் மியூசிக்கை பிரபலப்படுத்த முக்கியமான சில விஷயங்களை எல்லாம் அன்சீனில் வைத்து விடுகின்றனர்.
Recommended Video
கேப்டன் டாஸ்க், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிந்து இரவு தூங்கும் போது ரம்யா பாண்டியன், இந்த வாரம் ஆரி தான் வெளியே போவார் என நினைக்கிறேன் என பேசும் அன்சீன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதுவும் அவர் அனிதா சம்பத்திடம் இதை சொல்வது தான் செம வேடிக்கை.

ஒட்டியும் ஒட்டாமலும்
ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் இருந்தே இதுவரை யாரிடமும் அதிகளவில் பற்று இல்லாமல் சோலோ பிளேயராகவே விளையாடி வருகிறார். ஆனால், ஆஜீத்திடம் மட்டும் கொஞ்சம் கூடுதல் பாசத்தை ரம்யா காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல பாலா, ஷிவானி மற்றும் கேபியுடனும் ஒட்டியும் ஒட்டாமலும் பழகி வருகிறார்.

ஆரி மீது காண்டு
ரியோ மற்றும் அன்பு கேங் மீது ரம்யாவுக்கு எப்போதுமே ஒருவித பகை இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், ஆரி மீது தான் டோட்டல் காண்டில் இருக்கிறார் ரம்யா பாண்டியன் என்பது நேற்றைய நிகழ்ச்சியில் வெளியான அன்சீன் மூலம் மீண்டும் தெளிவாகி இருக்கிறது.

ஆரியை கலாய்த்து பாட்டு
அர்ச்சனா, நிஷா எல்லாம் இருக்கும் போதே, ஆரியை கலாய்த்து, ஆரி.. நீ ஒரு மாறி.. போடுவ வேற மாறி என பாடி ஆடினார். அர்ச்சனா மற்றும் அவரது கேங்கும் ரம்யாவை நல்லாவே உசுப்பேற்றி விட்டு ஆரிக்கு எதிராக செயல்பட வைத்தனர். பாலா, ரியோவை தொடர்ந்து ஆரியை அந்த வீட்டில் எதிர்க்கும் நபராக ரம்யா இருந்து வருகிறார்.

10 ஆயிரம் பரிசு
நேற்றைய எபிசோடில், கேப்டன் டாஸ்க்கில் ஜெயித்த ஆரிக்கு ஜெயச்சந்திரன் நிறுவனம் சிறப்பு பரிசாக 10 ஆயிரம் ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சரை கொடுத்தது. அதனை எடுத்து வரும் போதே பாலாவுக்கு மூஞ்சில் ஈயாடவில்லை. ஆனாலும் சிரித்துக் கொண்டே வந்து ஆரிக்கு அதை அவர் கையாலே கொடுத்தார்.
ஆரி தான் வெளியே போவார்
இந்நிலையில், இரவு தூங்கும் போது அனிதா சம்பத்திடம், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆரி தான் வெளியே போவார் என ரம்யா பேசிய அன்சீன் காட்சி வைரலாகி வருகிறது. ஆரிக்கு பத்தாயிரம் கொடுத்த நிலையில், அவர் தான் வெளியேறுவார் என்றும், ஆரம்பத்தில் ரேகாவுக்கு மீன் கொடுத்து வெளியே அனுப்பினர் என சம்பந்தமே இல்லாமல் பேசி அனிதாவை ஆறுதல் படுத்தினார்.

பாவம் அனிதா
ஆனால், பாவம் அனிதாவுக்கு தெரியாது, இந்த வாரம் அவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று, இன்றைய முதல் புரமோவிலேயே அனிதாவை சுட்டிக் காட்டி கமல் பேசியதில் இருந்தே அனிதாவின் வெளியேற்றத்தை உறுதிபடுத்தி விட்டனர். நிகழ்ச்சியில் என்ன ஆகிறது என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











