கல்யாணமாகி ஒரு மாசம் ஆச்சு இன்னுமா ஹனிமூன்.. சட்டு புட்டுனு அடுத்த வேலையை ஆரம்பிங்க ரம்யா பாண்டியன்!
சென்னை: சோசியல் மீடியாவில் பலவிதமான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின், மனதில் தனி இடத்தை பிடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து கணவருடன் ஜாலியாக ஹனிமூன் ட்ரிப் சென்றிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், இணையத்தில் விதவிதமான போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கடுப்பில் போட்டோவிற்கு கீழே கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இயக்குனரும் நடிகருமான அருண்பாண்டியனின் தம்பி மகளான, ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் பாடத்தை தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தார். ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது.

நடிகை ரம்யா பாண்டியன்: எதிர்பார்த்த அளவு பட வாய்ப்பு அமையவில்லை என்பதால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வந்தார். அதில், மொட்டை மாடியில் இவர் எடுத்த ஒரே ஒரு போட்டோஷூட் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அந்த போட்டோசூட்டை தொடர்ந்து, விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய இவர் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

படமே இல்லை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த ரம்யா பாண்டியனுக்கு எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஆனால் மலையாளத்தில் மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு கேரளா அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் கிடைத்தது. இப்போது ரம்யா பாண்டியன் அவர்களுக்கு பெரிதாக எந்த படமும் கைவசம் இல்லை, இடும்பன் காரி என்ற திரைப்படத்தில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.

அடுத்த வேலையை பாருங்க: இதைத்தொடர்ந்து, நடிகை ரம்யா பாண்டியன் தனது காதலரான லவல் தாவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம், கங்கை நதிக்கரையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது ரம்யா பாண்டியன், தனது காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தனது கணவருடன் வெளிநாட்டில் இருந்து வருகிறார் ரம்யா. தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் ஷேர் செய்த போட்டோபை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னுமா ஹனிமூன் சட்டுபுட்டுனு அடுத்த வேலைய பாருங்க என்று கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











