ஒயிட் கலர் சுடிதாரில்.. வைரமா மின்னுறாங்களே.. நகைக் கடையை திறந்து வைத்த ரம்யா பாண்டியன்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேற லெவல் வரவேற்பு நடிகை ரம்யா பாண்டியனுக்கு கிடைத்து வருகிறது.

போரூரில் நகைக்கடை ஒன்றை திறந்து வைக்க சென்றபோது, அங்கே எடுத்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

ஒயிட் கலர் சுடிதாரில், க்யூட்டான ஸ்மைலில் சும்மா வைரம் போல நீங்களே மின்னுறீங்களே என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

போரூர் நகைக் கடை

போரூர் நகைக் கடை

போரூரில் உள்ள நாராயண பேர்ல்ஸ் எனும் நகைக்கடையை நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ரம்யா பாண்டியன் திறந்து வைத்தார். அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன். வெள்ளை நிற சுடிதாரில் தனக்கே உரித்தான புன்னகையுடன் ஒவ்வொரு புகைப்படத்திலும் ஜொலிக்கிறார்.

பிரபலப்படுத்திய பிக் பாஸ்

பிரபலப்படுத்திய பிக் பாஸ்

டம்மி டப்பாசு படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன், ஜோக்கர் படத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானார். அதன் பிறகு மொட்டை மாடியில் நடத்திய போட்டோஷூட் வேற லெவலில் வைரலானது. விஜய் டிவியின் குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர்கள் குவிந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி மேலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த உதவி உள்ளது.

சூர்யா படம்

சூர்யா படம்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ரம்யா பாண்டியன் சமீபத்தில் கமீட் ஆனார். பட பூஜையுடன் ஷூட்டிங்கும் ஆரம்பமாகி விட்டது. சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்படும் நடிகை வாணி போஜனுடன் இணைந்து புதிய படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார்.

வைரம் போல

வைரம் போல

நகைக் கடையை திறந்து வைக்க வந்த நடிகை ரம்யா பாண்டியன், ஒயிட் கலர் சுடிதார் அணிந்து அப்படியே வைரம் போல ஜொலிக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரம்யாவுக்கு லைக் போட்டு வர்ணித்து வருகின்றனர். சீக்கிரமே உங்க படத்தை தியேட்டரில் பார்க்க ஆசை என்றும் வாழ்த்தி வருகின்றனர்.

ரம்யா அக்கா

ரம்யா அக்கா

ரம்யா பாண்டியனை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரது குடும்பத்தினர் பிரபலங்கள் ஆகி விட்டனர். ரம்யாவின் தம்பி பரசு மற்றும் அவரது அக்கா சுந்தரி திவ்யா பாண்டியன் இருவருமே ஏகப்பட்ட பேட்டிகளை கொடுத்து ரம்யாவுக்கு பக்க பலமாக இருந்தனர். நகைக்கடை திறப்பு விழாவின் போது கூட ரம்யா பாண்டியனுடன் அவரது அக்காவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X