பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தின் அசத்தல் அப்டேட்.. வைரலாகும் டிவீட்!
சென்னை: ரம்யா பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தின் பின்னணி இசை பணியை பிரபல பாடகரான கிரிஷ் நிறைவு செய்துள்ளார்.
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ரம்யா பாண்டியன். இதில் ஃபைனல் வரை சென்றார் ரம்யா பாண்டியன்.

திட்டி தீர்த்த ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான ஆரியை சக ஹவுஸ்மேட்டுகளுடன் சேர்ந்து டார்கெட் செய்தார். இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். பாய்சன், விஷம், நரி என பலரும் திட்டி தீர்த்தனர்.

ரம்யா பாண்டியன்
ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோ ஷூட்டுக்களை நடத்தி சமூக வலைதளங்களில் அவற்றை ஷேர் செய்வது என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

வாணி போஜன் லீடிங்
இந்தப் படத்தின் பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. இப்படத்தில் நடிகை வாணி போஜனும் லீடிங் ரோலில் நடித்து வருகிறார்.

கம்போஸிங் நிறைவு
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் இசையமைப்பாளரான கிரிஷ், படத்தின் கம்போஸிங் பணிகளை முடித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, 2டி எண்டெய்ன்மெண்ட்டின் புரடெக்ஷன் நம்பர் 14க்கு பணிகள் நிறைவடைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

சூர்யா 40
இந்தப் படத்தை அரிசில் மூர்த்தி இயக்குகிறார். இதனிடையே நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சத்தியராஜ், சரண்யா பொன்வண்ணன் தேவதர்ஷினி, சூரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











