ரம்யா பாண்டியன் படத்துக்கு எப்படி பூஜை போட்டாங்கன்னு பாருங்க.. வீடியோவை வெளியிட்ட சூர்யா நிறுவனம்!
சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இந்த படத்தை இயக்கவுள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.

பெரிய வாய்ப்பு
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி வரை போராடிய ரம்யா பாண்டியனுக்கு டைட்டில் கிடைக்க வில்லை என்றாலும், வெளியே வந்ததும் முதல் ஆளாக சூர்யாவின் பேனரில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்ல தரமான படங்களை 2டி நிறுவனம் தொடர்ந்து கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கதை பிடிச்சுப் போச்சு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கு முன்னதாகவே டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த ரம்யாவிடம் அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி சொன்ன கதை ரொம்பவே பிடித்துப் போக உடனடியாக ஓகே சொல்லி உள்ளார்.

பூஜையுடன் ஆரம்பம்
நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. அந்த பூஜையில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படத்தை 2டி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
பூஜை வீடியோ
ரம்யா பாண்டியனின் புதிய படம் ஆரம்பமான செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அவர்களை மேலும், உற்சாகமூட்டும் வகையில் பட பூஜை வீடியோவை 2டி நிறுவனம் வெளியிட்டு வைரலாக்கி வருகிறது. இந்த படம் 2டி நிறுவனத்தின் 14வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் யார்
நடிகை சங்கீதாவின் கணவரும் பாடகருமான கிரிஷ் தான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். தனக்கு இந்த சூப்பரான வாய்ப்பை அளித்த நடிகர் சூர்யாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிஷ் நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் முருகனின் அறுபடை வீடுகளை பற்றியும் அவர் இசையில் வெளியான ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரம்யா லைவ்
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இன்ஸ்டாகிராம் லைவ்விலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ரம்யா பாண்டியன் வந்து பேசினார். பிக் பாஸ் குறித்தும், நெகட்டிவிட்டி, பாசிட்டிவிட்டி குறித்தும் ஏகப்பட்ட விஷயங்களையும் ரசிகர்களின் கேள்விகளுக்கான பதில்களையும் கூறினார்.


Click it and Unblock the Notifications











