Ramya Pandian: பிக் பாஸ் போனது எனக்கு யூஸா? ரம்யா பாண்டியன் பளிச் பேட்டி!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தனது பிக் பாஸ் பயணம் குறித்தும் அதனால் தான் என்ன பலன் அடைந்தேன் என்பது குறித்தும் பேசி உள்ளார்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதன் கடந்த 6 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி உள்ளார்.
விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் பேசிய வீடியோ ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 வருது: கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பரில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 6 முடிந்த பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2 இடம்பெறவில்லை. இந்நிலையில், சீக்கிரமே நிகழ்ச்சியை ஆரம்பிக்க பிக் பாஸ் குழு தீவிரம் காட்டி வருகின்றனர். விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த கணிப்புகளும் உறுதியான தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசீம் டைட்டில் வின்னர்: கடந்த சீசன் கிராண்ட் ஃபினாலே ரொம்பவே சர்ச்சையை கிளப்பியது. விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் மூவரும் இறுதிப் போட்டியாளராக இருந்த நிலையில், ஷிவின் ரன்னர் அப் ஆனார். அதன் பின்னர் அசீமின் கையை தூக்கி கமல் அவர் தான் டைட்டில் வின்னர் என அறிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர், அதன் போட்டியாளர்களோ வெற்றியாளர்களோ சினிமாவில் பெரிதாக ஷைன் ஆவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் கிளம்பின. பிக் பாஸ் டைட்டில் வின்னர்களான பலரும் அடுத்த கட்டத்திற்கு ஏன் செல்லவில்லை என்கிற கேள்வி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியனிடம் வைக்கப்பட்ட நிலையில், அதற்கான பதிலை அவர் தனது ஸ்டைலில் கூறியுள்ளார்.
ரம்யா பாண்டியன்: நடிகர் அருண் பாண்டியனின் சகோதரரின் மகளான ரம்யா பாண்டியன் டம்மி டப்பாஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ராஜு முருகனின் ஜோக்கர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். அதன் பின்னர் சமுத்திரகனியுடன் இணைந்து ஆண் தேவதை படத்திலும் இவர் நடித்திருந்தார்.
ஆனால், அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகளோ இவருக்கான தனியான அங்கீகாரமோ கிடைக்காத நிலையில், விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பிக் பாஸ் போனதால் என்ன பயன்: இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனதால் தனக்கு என்ன பயன் கிடைத்தது என்கிற கேள்விக்கு? எல்லாமே ஒரு ஃபிளாட்பார்ம் தாங்க, அந்த ஃபிளாட்பார்மை நீங்க எப்படி பயன்படுத்திக்கிறீங்க என்பதில் தான் விஷயமே இருக்கு.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கான தனித்துவமான அடையாளம் கிடைத்ததே எனக்கு பெரிய பிளஸ் ஆக பார்க்கிறேன் என பேசி உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் அந்த சீசனில் ரன்னர் அப் ஆக கூட வரவில்லை. ஆரி டைட்டிலை வென்றார். பாலா ரன்னர் அப் ஆனார். பிக் பாஸ் அல்டிமேட்டில் வைல்டு கார்டாக பங்கேற்றிருந்தார் ரம்யா பாண்டியன்.


Click it and Unblock the Notifications











