Ramya Pandian: விடாமல் எப்படி அடிக்கிறாரு பாருங்க.. தனுஷ் பட நடிகருடன் விளையாடும் ரம்யா பாண்டியன்!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் இளம் நடிகர் ஒருவருடன் பேட்மிண்டன் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
டம்மி டப்பாஸ், ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாமல் இருந்து வந்தார் ரம்யா பாண்டியன்.

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் தான் ரம்யா பாண்டியனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.
மம்மூட்டிக்கு ஜோடியாக:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரம்யா பாண்டியனுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சூர்யா தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து கலக்கிய ரம்யா பாண்டியனுக்கு மம்மூட்டிக்கு ஜோடியாக நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மலையாள திரையுலகின் மெகாஸ்டார் நடிகருடனே ஜோடிப் போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.
ஐபிஎல் பார்த்த ரம்யா பாண்டியன்:
தனது சகோதரியுடன் நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை மைதானத்துக்கு சென்று பார்த்து ரசித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

தோனியை பார்த்த சந்தோஷத்தில் கண்டிப்பா இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை சென்னைக்குத் தான் என பதிவிட்டு வெளியிட்ட வீடியோ டிரெண்டானது. இந்நிலையில், கிரிக்கெட் விளையாடும் வீடியோவை ரம்யா பாண்டியன் போடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பேட்மிண்டன் விளையாடும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்
தனுஷ் பட நடிகருடன் விளையாட்டு:
விவேகம், விஸ்வாசம் மற்றும் தனுஷ் நடித்த மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இளம் நடிகர் சாய் சித்தார்த் உடன் ஜோடிப் போட்டு சனிக்கிழமை அதுவுமா தனது வீக்கெண்டை பேட்மிண்டன் விளையாடி கழித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.
யோகா செய்வது, துப்பாக்கி சுடுவது என விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கிறீங்களா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











