பாலாவுக்கு இத்தனை கிளவுஸா? விட்டா டைட்டில் வின்னர் ஆக்கிடுவாங்க போல தெரியுதே.. அட்டக்கத்தி யாரு?
சென்னை: இருக்கு இன்னைக்கு சம்பவம் இருக்கு என பாக்ஸிங் கிளவுசையும் அட்டகத்தியையும் ரியோவும், பாலாவும் எடுத்து வந்தனர்.
பாலாவுக்கு ஏகப்பட்ட அட்டக்கத்தி கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, பாலாவுக்கு ஏகப்பட்ட பாக்ஸிங் கிளவுஸ் கொடுத்து ரசிகர்களை ஹவுஸ்மேட்கள் நல்லாவே ஏமாத்திட்டாங்க..
அதுக்கு அவங்க சொன்ன அடடே விளக்கம் இருக்கே, அவுட் ஆஃப் தி பிக் பாஸ்!

பாக்ஸிங் கிளவுஸ்
பிக் பாஸ் வீட்டின் டஃப் போட்டியாளர் யார் யார் என்பதை கணிக்க ஹவுஸ்மேட்களிடம் பாக்ஸிங் கிளவுஸ்களை கொடுத்து கொடுக்க சொன்னார் கமல். ரியோ ராஜ், ஆரி மற்றும் பாலாவுக்கே அதிகப்படியன பாக்ஸிங் கிளவுஸ் கிடைத்தது. பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டஃப் போட்டியாளர்கள் இவர்கள் மூன்று பேர் தான் என்பது தெளிவாகி உள்ளது.

அட்டக்கத்தி
அதே போல அட்டக்கத்தியையும் கொடுத்து ஹவுஸ்மேட்களை கொடுக்க சொன்னார். நிஷா, பாலா மற்றும் ஜித்தன் ரமேஷுக்கு அட்டக்கத்திகள் கொடுக்கப்பட்டன. ரமேஷுக்கு எல்லாமே தெரியும். ஆனால், அவர் எதிலும் தலையிடாமல் இருக்கிறார் என்றும், நிஷா அவங்களோட கேம் விளையாடாமல், ஜாலியா இருக்காங்க என்றும் கூறினார்கள்.

பாலாவுக்கு இரண்டுமே
லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் எல்லாம் கோட்டையை விட்டு ஜெயிலுக்குப் போன பாலாவை பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹீரோ போலவே மாற்றி விட்டனர். ஆனால், அவர் ஹீரோவா? வில்லனா? என்பதை இன்னமும் உறுதியாக சொல்ல முடியாதபடி, அவருக்கு அதிகப்படியான கிளவுஸ்களும், நிஷாவுக்கு அடுத்து அட்டக்கத்தியும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அவுட் ஆஃப் தி பாக்ஸ்
பாலாஜி முருகதாஸுக்கு கிளவுஸ் கொடுத்த ரம்யா பாண்டியன், அவர் அவுட் ஆஃப் தி கேம், அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஆடினாலும், ரொம்ப சுவாரஸ்யமான டஃப் ஆன போட்டியாளர். டைட்டில் வின் பண்ணவும் அதிக வாய்ப்புகள் இருக்கு என ஒரே போடாக போட்டுவிட்டார். ரியோவை ஹீரோ போல இருக்கீங்கன்னு சொல்லி ஏத்தி விட்ட மாதிரியே பாலாவையும் ஏத்தி விடுகிறார் இது தான் ரம்யாவின் அடுத்த ஸ்ட்ராட்டர்ஜியோ?

என்னது டைட்டில் வின்னரா?
எப்படா பயில்வான் பாலாவை வீட்டை விட்டு வெளியேத்துவாங்கன்னு ரசிகர்கள் எதிர்பர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், பாலாஜி முருகதாஸை டைட்டில் வின்னர் என ரம்யா பாண்டியன் கொம்பு சீவி விட்டதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். ஏதோ பிளான் பண்ணிட்டாங்க என்றும் விமர்சித்து வருகின்றனர்.

அட்ரஸ் இழந்த அர்ச்சனா
பாலா, ஆரி, ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் டஃப் போட்டியாளராகவும், நிஷா, ரமேஷ், அட்டைக் கத்திகளாவும் தேர்வானார்கள். ஆனால், எதுவுமே கிடைக்காமல் யார் இருந்தா என கமல் கேட்டதற்கு, அர்ச்சனா, சோமசேகர், ஷிவானி உள்ளிட்டோர் எழுந்து நின்றனர். வந்த புதுசுல அந்த ஆட்டம் போட்ட அர்ச்சனா கடைசியா இப்படி அட்ரஸே தெரியாமல் ஆகிவிட்டாரே என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











