சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்படும் ரம்யா பாண்டியன்.. நெகட்டிவிட்டி குறித்து பளீச் பதில்!

சென்னை: சோஷியல் மீடியாவில் தன்னைப் பற்றி விமர்சிப்பது குறித்து நடிகை ரம்யா பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிக விமர்சனத்துக்குள்ளான போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரம்யா பாண்டியன்.

ஆரி குறித்து பின்னால் விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். மேலும் மற்றவர்களையும் ஆரிக்கு எதிராய் தூண்டி விட்டு வந்தார்.

ஆரி குறித்து நெகட்டிவ்

ஆரி குறித்து நெகட்டிவ்

எப்போது நாமினேஷன் வந்தாலும், எந்த டாஸ்க் என்றாலும் ஆரியை மட்டுமே நாமினேட் செய்தார். சக ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் ஆரி குறித்து நெகட்டிவாக பேசி வந்தார். அவரது குடும்பத்தினர் ஆரி குறித்து நல்ல விதமாக பேசிய போதும் அதனை உணராமல் தொடர்ந்து ஆரியை டார்கெட் செய்தார்.

பொறாமை பிடித்தவர்

பொறாமை பிடித்தவர்

கமல் எபிசோடிலும், 90 நாட்களாய் பிக்பாஸ் வீட்டில் போரிங்காய் இருந்த நபர் ஆரிதான் என்று கூறினார். மேலும் ஆரியை பொறாமை பிடித்தவர் என்றும் அடுத்தவரை குற்றம்சாட்டியே வெற்றி பெற பார்க்கிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.

ஆரியின் ரசிகர்கள்

ஆரியின் ரசிகர்கள்

ஆரியை கெட்டவராக காட்ட வேண்டும் என்று பாலாஜிக்கு அடுத்தப்படியாக பிக்பாஸ் வீட்டில் அதிகம் மெனக்கெட்டவர் ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியனின் நடவடிக்கையால் கடுப்பான ஆரியின் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பட்டப் பெயர்களுடன் மீம்ஸ்

பட்டப் பெயர்களுடன் மீம்ஸ்

இன்னமும் விஷப் பாண்டியன், பாய்சன், நரி பாண்டியன், பாம்பு பாண்டியன் என பல மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். பல பட்டப் பெயர்களையும் வைத்துள்ளனர். தற்போது பிக்பாஸ் நிறைவடைந்துள்ள நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு ரம்யா பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.

அவர்களின் ஒப்பினியன்..

அவர்களின் ஒப்பினியன்..

அதில் உங்களைப் பற்றி அதிகம் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருகிறதே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். அதற்கு அது அவர்களின் ஒப்பினியன் என கூலாக பதில் சொல்கிறார். மேலும் இதுதான் என் பதில் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார் ரம்யா பாண்டியன்.

உள்ளே போய் அழாதீர்கள்

உள்ளே போய் அழாதீர்கள்

இதனை பார்த்த நெட்டிசன்கள், அழுத்தம் பிடித்தவர்தான் இந்த ரம்யா பாண்டியன் என கூறி வருகின்றனர். மேலும் சிலர் இந்த தெளிவு இருந்தால் சரிதான் என்றும், வெளியில் சிரித்து விட்டு உள்ளே போய் ட்ரோல்ஸை பார்த்து அழாதீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X