Ramya Pandian: என்னை பச்செக்கென கவரும் ரோல்களில் நான் நிச்சயம் நடிப்பேன்.. ரம்யா பாண்டியன்

Recommended Video

Ramya Pandian Hair Style: ‘புள்ளிங்கோ' எல்லாம் பயங்கரம்-வீடியோ

சென்னை: என்னை ஒரு ரோல் நன்றாக கவர வேண்டும். அப்படிக் கவரும் பட்சத்தில் நிச்சயம் அதில் நான் நடிப்பேன் என்று கூறுகிறார் ரம்யா பாண்டியன்.

இவர் வேறு யாரும் இல்லங்க, நம்ம அருண் பாண்டியனோட செல்ல மகள்தான். இவரைப் போலவே இவரது சகோதரி கீர்த்தி பாண்டியனும் கூட நடிகைதான். இருவரும் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல தங்களது முத்திரையைப் பதித்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நல்ல அழகி மட்டும் அல்ல.. நல்ல நடிகையும் கூட. அப்படி ஒரு திறமை இவருக்குள் புதைந்து கிடக்கிறது. அதை விட முக்கியம் ஒரு முழுமையான நடிகையாக நான் இருப்பேன் என்று அடித்துச் சொல்கிறார் ரம்யா பாண்டியன். திறமை இல்லாவிட்டால் இப்படி தைரியமாக சொல்ல முடியாது பாருங்க.

குறும் படம்

குறும் படம்

மானே தேனே பொன்மானே.. இதுதான் இவரது முதல் படம். இது குறும்படமாகும். இங்கிருந்துதான் இவரது பயணம் தொடங்குகிறது. இவரது நடிப்பைக் கண்டு கொண்ட தமிழ்த் திரையுலகம் இவரது திறமையைப் பார்த்து மயங்கி கொடுத்த வாய்ப்புதான் கூந்தலும் மீசையும். தொடர்ந்து வந்த டம்மி டப்பாசு இன்னொரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் ஜோக்கர்தான் இவரை கவனிக்க வைத்தது.

சினிமாவில் எளிதாக

சினிமாவில் எளிதாக

பயோ மெடிக்கல் என்ஜீனியரிங் படித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால் குடும்பத்தில் நடிப்பும், சினிமாவும் ஊறிக் கிடந்ததால் அதில்தான் இவரது மனமும் திளைத்திருந்தது. இதனால் சினிமாவில் எளிதாக இவரால் ஒன்று கலக்க முடிந்தது. நடிப்பும் கை கூடியது. ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரம்யா.

பெரிய திரைக்கு ஷிப்ட்

பெரிய திரைக்கு ஷிப்ட்

என்னதான் சினிமாக் குடும்பமாக இருந்தாலும் கூட படித்ததும் நடிக்க வந்து விடவில்லை. மாறாக ஒரு வேலையில் அமர்ந்தார். அதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பிறகு வந்த குறும்பட வாய்ப்பை பிடித்துக் கொண்டு அப்படியே பெரிய திரைக்கும் ஷிப்ட் ஆகி விட்டார். அப்பாவின் அன்பும், ஆதரவும் கூடவே இருந்ததால் இவரால் நடிப்பில் எளிதாக பயணிக்க முடிகிறதாம்.

ராஜு முருகனிடம்

ராஜு முருகனிடம்

உண்மையில் இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்படம் எடுக்கப்படவில்லை. இதனால் சக்திவேலே இவரை ராஜு முருகனிடம் அறிமுகப்படுத்த ஜோக்கர் பட வாய்ப்பு கூடி வந்தது. பிறகு நடந்தது அனைவருமே அறிந்ததே. சுத்தத் தமிழச்சியான ரம்யா பாண்டியன், அட்சர சுத்தமகா வசனம் பேசுவதும் அவரது இன்னொரு திறமை.

பிடித்தால் நடிக்கலாம்

பிடித்தால் நடிக்கலாம்

ஜோக்கர் படம் வெளியானதும் சமுத்திரக்கனி போனைப் போட்டு ரம்யாவை பாராட்டித் தள்ளி விட்டாராம். அத்தோடு நில்லாமல் ஆண் தேவதை பட வாய்ப்பையும் கொடுத்தாராம். சந்தோஷமாக கூறுகிறார் ரம்யா. கதையைக் கேட்ட பிறகு பிடித்தால் நடிக்கலாம் என்று சொல்லி அந்த வாய்பபைக் கொடுத்தாராம் சமுத்திரக்கனி.

பாதிக்க வேண்டும்

பாதிக்க வேண்டும்

எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை என்று கேட்டால், அப்டியெல்லாம் லிமிட் எதுவும் இல்லை. எனக்கு கதை பிடிக்க வேண்டும். என்னை அது பாதிக்க வேண்டும். எனது கேரக்டர் பேசப்பட வேண்டும். அப்படிப்பட்ட வேடம், படம் எதுவாக இருந்தாலும் சரி, நான் உடனே அதில் நடிப்பேன். எந்தக் கட்டுப்பாட்டையும் இதில் நான் வைத்துக் கொள்ளவில்லை. பிடித்திருக்க வேண்டும். அது மட்டும்தான் எனது நிபந்தனை என்று கூறி சிரிக்கிறார் ரம்யா பாண்டியன்.

அப்பா பெயரை சூப்பராக காப்பாத்திருவார் இந்த திறமையான ரம்யா பாண்டியன்.. ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரு கலக்கு கலக்க வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X