திரு நீறும். குங்குமமும்.. எளிமையான அழகில் இளைஞர்களை ஏங்க வைக்கும் ரம்யா பாண்டியன்!

சென்னை: கோயில் குளம் அருகே நடிகை ரம்யா பாண்டியன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

போட்டோஷூட் பேபி

போட்டோஷூட் பேபி

பெரிதாக சினிமா வாய்ப்புகள் வராத நிலையில், இவர் நடத்திய போட்டோஷூட் இவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. பிரபல புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன் கேமரா லென்ஸ் வழியாக அழகிய தேவலோக மங்கையாக காட்சி தந்தார். மொட்டை மாடியில் எடுத்த இடுப்பு போட்டோஷூட் தான் இவரை ஓவர் நைட்டில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

சிரித்தே சமாளிக்கும் ஆற்றல்

சிரித்தே சமாளிக்கும் ஆற்றல்

நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இரு முறை கேப்டனாக இருந்த இவர், கடைசி வரை டஃப் போட்டியாளராக அசத்தினார். எந்தவொரு பிரச்சனை வந்தாலும் சிரித்தே சமாளிக்கும் இவரது ஆற்றல் ஏகப்பட்ட ரசிகர்களை இவரது ஆர்மியில் இணைக்க காரணமாக அமைந்தது.

ஆடையை பறக்கவிட்டு

ஆடையை பறக்கவிட்டு

சமீபத்தில் தனது ஆடையை பறக்கவிட்டு இவர் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் லட்சக் கணக்கான லைக்குகளை அள்ளின. பிக் பாஸ் பிரபலமான சோமசேகர், ரம்யா பாண்டியனின் அந்த புகைப்படங்களுக்கு லைக் போட்டிருந்தார். நிஜமாக இருப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என கேப்ஷன் கொடுத்திருந்தது பலரது பாராட்டுக்களை அள்ளியது.

திரு நீறும், குங்குமமும்

திரு நீறும், குங்குமமும்

இந்நிலையில், தற்போது நெற்றியில் திருநீர் மற்றும் குங்குமத்தை சிறிய அளவில் அழகாக வைத்துக் கொண்டு எளிமையான தோற்றத்தில் கோயில் குளம் அருகே ரம்யா பாண்டியன் எடுத்த புகைப்படம் அவரது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ரொம்ப அழகா இருக்கீங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

அர்ச்சனா கமெண்ட்

அர்ச்சனா கமெண்ட்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சக போட்டியாளராக கலந்து கொண்ட அர்ச்சனா இந்த புகைப்படத்தை பார்த்து அழகியே என கமெண்ட் செய்துள்ளார். சம்யுக்தா பியூட்டி என கமெண்ட் செய்துள்ளார். ஆஜித் இந்த போட்டோவிற்கு லைக் செய்துள்ளார். சுமார் 2 லட்சம் லைக்குகளை இந்த புகைப்படம் அள்ளி வைரலாகி வருகிறது.

பெரிய திரையில் காண

பெரிய திரையில் காண

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ரம்யா பாண்டியனின் படத்தை சீக்கிரமாகவே பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரம்யா பாண்டியன் உடன் நடிகை வாணி போஜனும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X