என்னாது.. நானா.. இது மட்டும்தானா.. வேற ஏதும் இல்லையா.. ரம்யா பாண்டியன் தம்பி பரபர கேள்வி!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் வேகமாக பரவி வரும் இந்த தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ரம்யா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரது குடும்பத்தினரும் மக்களுக்கு அறிமுகமாகினர்.

டம்மி பட்டாசு முதல் படம்
நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.இதையடுத்து, சமூக பிரச்சனைகளை மையமாக கொண்ட ஜோக்கர் திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதற்குப் பின்னர் சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண்தேவதை என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஏகப்பட்ட ரசிகர்கள்
தோல்வி படங்களால் துவண்டுவிடாமல் ரம்யா நடத்திய மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த ரம்யா பாண்டியனுக்கு நான்காம் இடம் தான் கிடைத்தது.

பாடல்கள் விரைவில் வெளியாகும்
ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மூர்த்தி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு பாடகர் கிருஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் விரைவில் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

யாரு நானா ஹீரோவா
இந்நிலையில்,ரம்யா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரது குடும்பத்தினரும் மக்களுக்கு அறிமுகமாகினர். அப்படி பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன். அவர் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன. இந்த தகவலை மறுத்துள்ள பரசு, இந்த தகவல் மட்டும் தானா இன்னும் வேற எதாவது தகவல் இருக்கா என்றும் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











