டைரக்டர் தாமிரா மரணம்...உருக்கமாக கருத்து பதிவிட்ட ரம்யா பாண்டியன்

சென்னை : கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், திரை பிரபலங்கள் பலரும் கொரோனா நோய் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த டைரக்டர் தாமிரா, இன்று காலை உயிரிழந்தார்.

Recommended Video

Ramya Pandian -ன் ஆண் தேவதை பட இயக்குனர் காலமானார் | RIP Thamira

டைரக்டர் ஷங்கர் தயாரித்த ரெட்டைசுழி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தாமிரா. முதல் படத்திலேயே இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோரை இயக்கிய பெருமையை பெற்றார். இந்த படத்தில் ஆரி, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.

ரம்யாவின் உருக்கமான பதிவு

ரம்யாவின் உருக்கமான பதிவு

தொடர்ந்து, ஆண் தேவதை என்ற குடும்ப படத்தை இயக்கினார். இதில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது டைரக்டர் தாமிரா உயிரிழந்ததை அடுத்து, அவரின் நினைவாக, உருக்கமான பதிவுடன் தாமிராவுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை ரம்யா பாண்டியன் பகர்ந்துள்ளார்.

 தாமிராவின் ரசிகை நான்

தாமிராவின் ரசிகை நான்

ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாமிரா சாரின் கதை எழுதும் திறமைக்கு நான் எப்போதுமே ரசிகை. தமிழ் மீது அவர் கொண்ட காதல் மற்றும் தாகம் நான் உட்பட பலருக்கும் முன்னுதாரணமாக இருந்துள்ளது.

திறமையை பாராட்ட தயங்கியதில்லை

திறமையை பாராட்ட தயங்கியதில்லை

எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை சுற்றி இருப்பவர்களை அவர் நடத்தும் விதம் அனைத்தையும் விட சிறப்பானது. ஆண் தேவதை படக்குழுவில் இருந்த அனைவரையும் அவர் மிகுந்த மரியாதையுடன் நடத்தினார். ஒருவருடைய திறமையை மனம் திறந்து பாராட்ட அவர் எப்போதும் தயங்கியதில்லை.

தனிப்பட்ட முறையில் பேரிழப்பு

தனிப்பட்ட முறையில் பேரிழப்பு

அவர் குடும்பத்தில் இருக்கும் ஒருவரை போல் எனக்கு ஆதரவாக இருந்து, என் மீது அக்கறை காட்டுவார். இது தனிக்கப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. எனக்கு நீங்கள் கொடுத்த அனைத்திற்கும் நன்றி சார். அன்பை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு ரம்யா பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் ரம்யாவின் பதிவு

வைரலாகும் ரம்யாவின் பதிவு

ரம்யா பாண்டியனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவை இதுவரை 72,000 க்கும் அதிகமானவர்கள் லைக் செய்து, கமெண்ட் செய்துள்ளனர். டைரக்டர் தாமிராவின் இறப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X