வெளியே போனாலும் அதுக்கு காரணம் நீயில்ல.. ரம்யாவுக்கு ஹின்ட் கொடுக்கும் புரோ.. இன்னைக்கு அவங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. நேற்று ஷிவானியின் அம்மாவும் பாலாஜியின் அண்ணனும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் ரம்யா பாண்டியனின் அம்மாவும் சகோதரரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

அழற டைப் இல்ல
ரம்யாவின் அம்மா ஸ்டோர் ரூமுக்குள் இருந்து வருகிறார். அவரை பார்த்ததும் கட்டியணைக்கும் ரம்யா, என்னுடைய பேட்டரி வந்துருக்கு என்று கூறுகிறார். தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசும் ரம்யாவின் அம்மா, அவங்க அழற டைப்லாம் கிடையாது என்கிறார்.

ரம்யாவின் சகோதரர்
அதனைக் கேட்ட சோம சேகர், மத்தவங்களதான் அழ விடுவாங்க என்று கூறுகிறார். அதனைக் கேட்டு ரம்யாவும் அவரது அம்மாவும் சிரிக்கின்றனர். ரம்யாவின் சகோதரரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.

க்ளியர் பண்ணிடுங்க
தொடர்ந்து கிட்சன் ஏரியாவில் நின்று பேசும் அவர்கள், நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை ஓபனா பேசி க்ளியர் பண்ணிடுங்க..யாரும் யாரையும் கம்ப்ளையன்ட்டாவோ வேண்டாம். எல்லாருமே பேசிடுங்க என்கிறார்.

அதற்கு காரணம் இல்லை
தொடர்ந்து கார்டன் ஏரியாவில் ரம்யாவிடம் பேசும் அவரது சகோதரர், இந்த வாரம் சிங்கிள் எவிக்ஷனோ டபுள் எவிக்ஷனோ நடந்து நீ வெளியே வந்தன்னா அதுக்கு காரணம் நீ கிடையாது என்று ஹின்ட் கொடுக்கிறார். அதனைக் கேட்ட ரம்யா வெளியே வர நிலைமை இருக்கா என்று கேட்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய முதல் புரமோ.


Click it and Unblock the Notifications











