பாகுபலி தேவசேனா கெட்டப்பில் .. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து.. ரம்யா பாண்டியனின் வைரல் புகைப்படம் !
சென்னை : பல்வேறு திரைப் பிரபலங்கள் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் வித்தியாசமான முறையில் ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சொல்லி அசத்தி உள்ளார்.
Recommended Video
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் இளசுகளின் கனவுக் கன்னியாக தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர்கள் நானி, பிரசன்னா, ராம் சரண், சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்களை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் வித்தியாசமான முறையில் தேவசேனா கெட்டப்பில் ரசிகர்களுக்கு விநாயகர்சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரம்யா பாண்டியன்
தமிழ் ரசிகர்கள் சமீப காலமாகவே அதிகமாக உச்சரிக்கப்படும் தமிழ் நடிகைகளின் பெயர்களில் ரம்யா பாண்டியன் முதன்மையான இடத்தில் உள்ளார். ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ சூட்டின் மூலம் உலக அளவில் பிரபலமான ரம்யா பாண்டியன் ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
இடுப்பழகை காட்டியவாறு செம கிளாமரில் கவர்ச்சியான போட்டோசூட் எடுத்து ரசிகர்களை சூடேற்றி விட்ட நடிகை ரம்யா பாண்டியன் மிகப்பிரபலமானதைத் தொடர்ந்து இப்போது பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தமிழ் ரசிகர்கள் அதிகம் ரசிக்கப்படும் நடிகைகளில் முதன்மையானவராக இருந்து வருகிறார்.

நடுவராக
குக் வித் கோமாளி என்ற சமையல் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் மற்ற நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கியதை தொடர்ந்து அந்த ஷோ மிகப்பெரிய வெற்றி அடைந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இவ்வாறு குக் வித் கோமாளி பிரம்மாண்ட வெற்றியடைந்ததை தொடர்ந்து இப்பொழுது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

லைக்குகளை அள்ளி
இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும் தனது பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ள ரம்யா பாண்டியன் தற்பொழுது வெளியிட்டுள்ள தேவசேனா புகைப்படம் ஒன்று பலரையும் ரசிக்க வைத்ததோடு லைக்குகளை அள்ளி வருகிறது.

திரைப்பிரபலங்கள்
ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக அனைவரின் வீடுகளிலும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி திரைப் பிரபலங்கள் நானி, பிரசன்னா, ராம் சரண், சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் தங்களது வீடுகளிலும் பூஜை அறைகளிலும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடியவாறு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அசத்தலான காஸ்ட்யூமில்
இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனும் தனது ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சொல்லும் விதமாக, பாகுபலியில் வரும் தேவசேனா கெட்டப்பில் அசத்தலான காஸ்ட்யூமில் அனைவரும் அசந்து போயி நிற்கும் அளவிற்கு தத்ரூபமாக இருக்கும் இந்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











