வின்னர் ரம்யா பாண்டியன்.. ரன்னர் ஷிவானி.. இந்த வாரம் வெளியே போறது இவர் தான்… இது என்ன கேம்?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தங்களுக்கு என விளையாட வந்துட்டு, அடுத்தவங்களை வின்னர் ஆக்குவது என்ன மைண்ட் செட்டுன்னே புரியலை. எவிக்‌ஷன் டாஸ்க் ரொம்பவே ஸ்க்ரிப்ட் பண்ணிட்ட மாதிரி தோணுதுன்னு பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

பெரும்பாலும் விஜய் டிவி ஆட்களே டாப் 8 இடத்தில் உள்ளனர். அவர்கள் மட்டும் தான் அத்தனை நாட்கள் இருக்க சம்மதித்து உள்ளே வந்தார்களா என்கிற கேள்வியும் எழுகிறது.

போரிங் போட்டியாளருன்னு ஆஜீத், ஷிவானியை எல்லாம் ஜெயில்ல போடுறாங்க, அவங்களே டாப் 8 போட்டியாளர்கள் என ஓட்டும் போடுறாங்களே.. ஒரே குழப்பமா இருக்கே?

நான் கிளம்புறேன் பா

நான் கிளம்புறேன் பா

போதும் டா.. இந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்து பட்ட அசிங்கம், அவமானம் எல்லாம் போதும் டா என எல்லா வலியையும் உள்ளே மறைத்து வைத்துக் கொண்டு வெளியே சிரித்தபடி விளையாடி வரும் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஜீத் சொன்ன ஆரூடத்தால் அப்செட் ஆகி, முதல் ஆளாக இந்த வாரம் நானே வெளியே போறேன்னு 16வது இடத்தை பிடித்துக் கொண்டார். எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸுக்கு விளையாடின மொட்டை பாஸ் இல்லையே இது!

அர்ச்சனாவை வெளியே அனுப்ப துடித்த பாலாஜி

அர்ச்சனாவை வெளியே அனுப்ப துடித்த பாலாஜி

வந்ததில் இருந்தே நீ பொடிப்பயன், ஒண்ணு வச்சேன்னா பாரு என அர்ச்சனா அக்கா, மிரட்டுறதெல்லாம் பார்த்தா பாலாஜிக்கு அவங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சோன்னு தெரியல, அர்ச்சனாவை உடனடியா வெளியே அனுப்ப துடித்துக் கொண்டு இருக்கிறார். அதுக்காகத் தான் சனம் ஷெட்டிக்கு கூட சப்போர்ட் பண்ணுகிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆமாம் சாமி வேல்முருகன்

ஆமாம் சாமி வேல்முருகன்

அர்ச்சனா அக்காவும் சும்மா இல்லை, பாலாஜிக்கு எப்படியாவது பதிலடி கொடுக்கணும்னு சொர்ணாக்கா மாதிரி சிரிச்சிட்டே காரியம் பண்ணி வருகிறார். அவர் பாலாஜியை வெளியே அனுப்ப ஆர்வம் காட்டிய உடன் எதுவுமே சொல்லாமல், வேல்முருகன் ஆமாம் சாமி போடுவது போலவே, பாலாஜியை நாமினேட் செய்தார். அதற்கு காரணம் கேட்டு வேல்முருகனை மேலும் டென்ஷன் ஆக்கி விட்டார் பாலாஜி.

சண்டையை சமாளித்த சம்யுக்தா

சண்டையை சமாளித்த சம்யுக்தா

நாடா? காடா? டாஸ்க்கில் சூப்பரா பெர்ஃபார்ம் பண்ண சம்யுக்தா, இந்த எபிசோடிலும் பாலாஜிக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே முட்டிக் கொண்ட சண்டையை நாட்டாமை பண்ணாம சமயோஜிதமாக சமாளித்தார். டாப் 8, பாட்டம் 8 என பிரித்து விளையாடுவோம் என அவர் சொன்ன யோசனை அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

பாட்டம் 8ல் அர்ச்சனா

பாட்டம் 8ல் அர்ச்சனா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வரை அர்ச்சனாவும் சுரேஷும் செல்வார்கள் என பார்த்தால், அந்த இருவரையும் பாட்டம் 8ல் கொண்டு வந்து விட்டுள்ளனர். சுரேஷ், சனம் ஷெட்டி, சம்யுக்தா, வேல்முருகன், சோம்ஸ், அர்ச்சனா, ஆரி, அனிதா என ஏகப்பட்ட டஃப் ஆன போட்டியாளர்கள் பாட்டம் 8ல் தேர்வாகினர்.

விஜய் டிவி புள்ளைங்கோ

விஜய் டிவி புள்ளைங்கோ

இந்த பக்கம் பார்த்தா டாப் 8ல் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், நிஷா, ஆஜீத், கேபி என எல்லாருமே விஜய் டிவி புள்ளைங்கோவாவே உள்ளனர். இதில் தப்பித் தவறி இருக்கும் ஒரே ஆளாக நடிகர் ரமேஷ் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. (என்னங்கடா நியாயம்)

வின்னர் ரம்யாவாம் ரன்னர் ஷிவானியாம்

வின்னர் ரம்யாவாம் ரன்னர் ஷிவானியாம்

மேலும், டாப் 8 ஆர்டரில் வின்னராக குக் வித் கோமாளி ரம்யா பாண்டியனும், ரன்னராக சரவணன் மீனாட்சி புகழ் ஷிவானியும் இடம்பிடித்துள்ளனர். ஷிவானி விளையாடவே மாட்டேங்குறாருன்னு சொல்றீங்க, அப்புறம் அவங்களையே ரன்னர் அப் ஆக ஆக்குறீங்க, எல்லாம் அந்த 2.3 மில்லியன் மாயம் தானா? (டி.ஆர்.பி முக்கியம் அமைச்சரே)

அப்போ ரியோ கிடையாதா

அப்போ ரியோ கிடையாதா

தான் தான் பிக் பாஸுன்னு நினைச்சிட்டு விளையாடுன அர்ச்சனா அக்காக்கு எல்லா ஹவுஸ்மேட்ஸும் சேர்ந்து பாட்டம் 8 லிஸ்ட்ல இடம் கொடுத்து ஆப்பு வச்சிட்டாங்க, ரியோ ராஜுக்கும் யாரும் வின்னர் இடத்தை கொடுக்கல, ஓவர் வாய் அனிதாவையும் 9வது இடத்தில போட்டு டிரெண்டிங் கனவை உடைச்சிட்டாங்க.. இது நல்லாத்தான் இருக்கு!

Recommended Video

Bigg Boss Day 18 Highlights • அர்ச்சனா Second பிக் பாஸ் போல? | Bigg Boss 4 Tamil
தேவையில்லாத ஆணி

தேவையில்லாத ஆணி

எப்படியோ ரம்யா பாண்டியனையும் ஷிவானி செல்லக் குட்டியையும் கடைசியில ஏமாத்தி விட்டு வெளியே அனுப்பத்தான் போறீங்க, எதுக்கு இந்த தேவையில்லாத ஆணி என எவிக்‌ஷன் லிஸ்ட் டாஸ்க்கையே ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதை வச்சி என்னலாம் பிக் பாஸ் மைண்ட் கேம் ஆடப் போறாருன்னு பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X