twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாம்பு கடிச்சு அப்பா இறந்துட்டாரு.. சத்யம் தியேட்டர் வாசல்ல வேலை செஞ்சேன்.. இது ரம்யா பாண்டியன் கதை

    |

    சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் முதல் வாரத்திலேயே தலைவியாக தேர்வான ரம்யா பாண்டியன் தனது வலுவான கதையை சும்மா விளையாட்டுத் தனமாக சொன்னதால் தான் அவரும் எவிக்‌ஷனுக்கு தேர்வாகி உள்ளார்.

    16 போட்டியாளர்களும் தங்களின் சொந்தக் கதை, சோகக் கதைகளை சொல்லி, நான் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியானவன் தகுதியானவள் என்பதை நிரூபிக்க வேண்டும் என பிக் பாஸ் உத்தரவு போட்டு இருந்தார்.

    அதன் பேரில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் கதைகளை கூறி வந்த நிலையில், ரம்யா பாண்டியனும் எப்படி பிக் பாஸுக்கு வந்தேன் என்கிற கதையை கூறியுள்ளார்.

    ஜோக்கர் ஹீரோயின்

    ஜோக்கர் ஹீரோயின்

    இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் தேசிய விருதுகளை தட்டிச் சென்ற ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்த படத்துக்கு கிடைத்த புகழ் அளவில் கொஞ்சம் கூட தனக்கு எந்த பேரும் புகழும் கிடைக்கவில்லை என கதை சொல்லும் போது நடிகை ரம்யா பாண்டியன் ஓப்பனாக பேசினார்.

    பாம்பு கடிச்சிடுச்சு

    பாம்பு கடிச்சிடுச்சு

    ஊருக்கு போயிட்டு வந்த போது, கண்ணாடியில் லேசா ஏதோ உரசியது என்று தான் நினைத்தோம். ஆனால், அப்பாவுக்கு இரண்டு நாளில், உடம்பு சரியில்லாம போக, டாக்டரை போய் பார்த்தோம், அங்க அப்பாவை பாம்பு கடிச்சிருக்கு என்றும் உடனடியாக குணப்படுத்தவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றும் சொன்னார்கள்

    அப்பா இறந்துட்டாரு

    அப்பா இறந்துட்டாரு

    சரியா அவரை கவனிக்காததால கிட்னி ஃபெயிலியர் ஆகி, நுரையிரல் பாதிப்பு என ஒவ்வொரு பார்ட்ஸா செயலிழக்க அப்பா இறந்துட்டாருன்னு சொன்னாங்க, அதுக்கப்புறம் எப்படி குடும்பத்தை காப்பாத்த போறோம்னு தெரியாம, சொந்தக் காலில் நிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டேன் என்றார் ரம்யா. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒரு நிமிடம் மெளனம் ஆனார்கள்.

    சத்யாம் தியேட்டர் வாசல்ல

    சத்யாம் தியேட்டர் வாசல்ல

    சென்னையில என்ன வேலை செய்றதுன்னே தெரியாம இருந்தப்போ, 2500 ரூபா சம்பளத்துக்கு ஒரு வேலை கிடைச்சது, அது என்னன்னா. சத்யம் தியேட்டர் வாசல்ல நின்னு வரவங்க போறவங்களுக்கு பேம்ப்ளட்ஸ் கொடுக்கணும். அப்போ எனக்கு 2500 ரூபாயே பெரிய சம்பளம். ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சு, கூச்சப்பட்டேன், அப்புறம் இதுவும் ஒரு வேலை தானேன்னு இறங்கி செஞ்சேன்

    நடிக்க சான்ஸ் கிடைச்சது

    நடிக்க சான்ஸ் கிடைச்சது

    அப்புறம் ஒரு நாள் பிரெண்ட் கூட துணைக்கு மேக்கப் டெஸ்ட்டுக்கு போனேன், அப்போ என்ன பார்த்த காஸ்டிங் டைரக்டர் ஒருத்தர், உங்களுக்கு போட்டோஜினிக் ஃபேஸ், நீங்க நடிக்கிறீங்களான்னு கேட்டாரு, வீட்டில ஒத்துக்கவே இல்லை, அப்புறம் நான் அடம்பிடிச்சு, அதுல கலந்துகிட்டேன், திடீர்னு என்ன பார்த்த இயக்குநர் ஹீரோயின் நீங்க தான்னு சொன்னதும், தலை காலே புரியல.. என சோகமான டோனில் இருந்து ஜாலியான டோனுக்கு ரம்யா வந்த உடனே ஹவுஸ்மேட்ஸ் முகங்கள் மாறின.

    இடுப்பு போட்டோஷூட்

    இடுப்பு போட்டோஷூட்

    சில படங்களில் நடிச்சிருக்கேன் ஆனால், எதிலுமே பெரிய அங்கீகாரம் எனக்கு இன்னும் கிடைக்கல, அதுக்கு அப்புறம் தான் அந்த இடுப்பு போட்டோஷூட் எடுத்தப்ப வைரல் ஆனேன், தொடர்ந்து விஜய் டிவியில குக் வித் கோமாளி பண்ணிட்டு, இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கேன் என கூலா பேசிவிட்டு சென்று விட்டார்.

    Recommended Video

    எனக்கு திக்குவாய் போட்டியாளர்களின் மறு பக்கம் Bigg Boss 4 Tamil Review
    கண்ணீர் வரணும் குமாரு

    கண்ணீர் வரணும் குமாரு

    நடிகை ரேகா, கேப்ரில்லா, ஆஜித், ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் பேசும் போது, எந்த ஒரு போட்டியாளருக்கு பெருசா ஃபீல் ஆகல, முக்கியமா கண்ணீர் வரல, கண்ணீர் வர மாதிரி சோகக் கதை சொன்னா தான் அவங்க நல்ல கதை சொன்னாங்கன்னு நினைச்சுகிட்டு இவங்களை எல்லாம் எலிமினேட்டுக்கு நாமினேட் பண்ணியிருக்காங்க.

    English summary
    Joker movie actress and Bigg Boss Tamil 4 first week captain Ramya Pandian shares her dad death incident and her own struggles in life and cinema industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X