Ramya Pandian: என்ன கொசுவலை மாதிரி இருக்கு.. ரம்யா பாண்டியனின் புது டிரெஸ்ஸை கலாய்த்த ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட்டாக வெள்ளை நிற உடையை அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியனை ரசிகர்கள் தலைவி என்றே அழைத்து வருகின்றனர். அந்த சீசன் டைட்டிலை அவர் வெல்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஆரி அலை காரணமாக அவரால் வெல்ல முடியவில்லை என்றாலும் கிராண்ட் ஃபினாலே வரை பிக் பாஸ் வீட்டில் முழுமையாக விளையாடி கலக்கினார்.

ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் என பல படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் அடுத்தடுத்தும் பெரிய படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.
இடுப்பு மடிப்பு: ஜோக்கர் படத்தில் நடித்தாலும் ரம்யா பாண்டியனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பின்னர் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க சான்ஸ் கிடைப்பதற்காக மாடியில் இவர் நடத்திய இடுப்பு மடிப்பு போட்டோஷூட் ஓவர் நைட்டில் இந்தியளவில் டிரெண்டானது. அதன் பின்னர் தான் ஏகப்பட்ட வாய்ப்புகள் ரம்யா பாண்டியனை தேடி வந்தது.
பிளேபாய் கேமராமேன் உடன்: பிரபல பிளேபாய் கேமராமேன் எல். ராமசந்திரன் உடன் கொலாப் செய்து ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோஷூட்களையும் ரம்யா பாண்டியன் நடத்தி வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஃபாலோயர்களை அதிகரித்தார். 2.7 மில்லியன் ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்களாக உள்ளனர்.
கொசுவலை டிரெஸ்: இந்நிலையில், வெள்ளை நிறத்தில் பேன்ட் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப்ஸை அணிந்து கொண்டு ரதி தேவதை போல ரம்யா பாண்டியன் போஸ் கொடுத்த புகைப்படங்களை லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் ஜொள்ளு விட அடுக்கி உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் ஏஞ்சல் என வர்ணித்து வந்தாலும், அவரது டிரெஸ்ஸை பார்த்த நெட்டிசன்கள் கொசுவலை மாதிரியே இருக்கே துணி என கலாய்த்து வருகின்றனர்.
இடும்பன்காரி: மம்மூட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் அடுத்ததாக பிரஜின் நடிப்பில் உருவாகி வரும் இடும்பன்காரி படத்தில் நடித்து வருகிறார். ஷிவதா, அனுபமா குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











