Just In
- 13 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 13 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 14 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 14 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
உலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரி.. நீ ஒரு மாறி.. வேற மாறி.. ரம்பம் போடும் ரம்யா.. ரசித்து சிரிக்கும் அர்ச்சனா அண்ட் கோ!
சென்னை: இன்றைய பிக் பாஸ் அன்சீன் புரமோவில் ரம்யா பாண்டியன், ஆரியை டீஸ் பண்ணி பாட்டுப் பாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அர்ச்சனா, நிஷா, ஷிவானி மூவரும் சேர்ந்து கொண்டு ரம்யா பாண்டியனிடம் ஆரி பற்றி பாட்டு ஒண்ணு சொல்லுங்க என கேட்க, ரம்யா ரொம்ப நக்கலாக பாடும் காட்சி அன்சீன் புரமோவில் இடம்பெற்று ஆரி ஆர்மியினரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.
ஆரிக்கு நேராக இந்த பாட்டை ரம்யாவால் பாட தைரியம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பி திட்டித் தீர்த்து வருகின்றனர்.
தப்பை ஒப்புக் கொண்ட பாலா.. தலைவி ஆவாரா ரம்யா? குருட்டுத்தனமாக சப்போர்ட் பண்ணும் ஹவுஸ்மேட்ஸ்!

சாஃப்ட் ஹர்ட்
ரம்யா பாண்டியனுக்கு சாஃப்ட் ஹர்ட்டுன்னு நல்ல பட்டப்பெயரைத் தான் வைத்துள்ளனர். ஷிவானி நாராயணனை பாலாவுடன் கோர்த்து கலாய்த்து வந்த ரம்யா, இப்போ ஆரியை பாட்டுப் பாடி கலாய்த்துள்ளார். ரம்யா, அர்ச்சனா, நிஷா, ஷிவானி என நான்கு பெண்கள் ஒன்று கூடி அதற்கு டான்ஸ் வேற ஆடுகிறார்கள்.

பாட சொன்ன அர்ச்சனா
ஆரியை ஆரம்பத்தில் இருந்தே தனது குரூப்பில் சேர்த்துக் கொள்ள அர்ச்சனா போட்ட திட்டமெல்லாம் நிறைவேறவில்லை. அதனால், ஆரியை ஒட்டுமொத்தமாக எதிர்க்க ஆரம்பித்தார். இந்த வாரம் அவரை போரிங் பர்ஃபார்மர் ஆக்கி ஜெயிலுக்குள் அனிதாவுடன் தள்ள நினைத்தார். ஆனால், பாலா உள்ளிட்டோரின் ஓட்டுக்களால் ஆரி சேவ் ஆனார். இந்த அன்சீனில் ரம்யாவிடம் ஆரியை வெறுப்பேற்றி பாட்டுப் பாட வைத்துள்ளார்.

ஆரி நீ ஒரு மாறி
ரம்யா பாண்டியனும், அர்ச்சனா கேட்ட உடன், "ஆரி.. நீ ஒரு மாறி.. வேற மாறி.. போடுவ.. வேற மாறி என கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறார் ஆரி என கையால் செய்கை காட்டிக் கொண்டே ரம்யா பாட அர்ச்சனா ஆட என பார்க்கவே ரொம்ப கொடூரமாக இருக்கிறது. அடிக்கடி ஆரியின் எக்ஸ்பிரஷன்களையும் எடிட்டர் மிக்ஸ் பண்ணி போட்டுள்ளார்.

அந்த பயம் இருக்கட்டும்
ஆரி நீ ஒரு அருவ.. என ரொம்பவே எல்லை மீறி ரம்யா பாடியதும், வந்துட்டார் பின்னாடி என அர்ச்சனா கொளுத்திப் போட, பயமில்லை என ரம்யா தொடர்கிறார். அப்போ நேரா பாட வேண்டியது தான என ரம்யாவை நல்லாவே அர்ச்சனா தூண்டிவிட, ஆப்பு எதுக்கு எனக்கு என ரம்யா அழகா அர்ச்சனாவின் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகிறார்.

அமைதியா இருங்க
அந்த குரூப்பிலேயே ஆரிக்கு சப்போர்ட் பண்ணுவது போல இருக்கும் ஷிவானி நாராயணன், அவருக்கு கேட்க போது, அமைதியா இருங்க என அர்ச்சனா, நிஷா மற்றும் ரம்யாவை அதட்டுகிறார். பெஸ்ட் பர்ஃபார்மருக்கும் ஆரிக்குத்தான் ஷிவானி ஓட்டுப் போட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டம்மி ரம்மி
ரம்யா பாண்டியன் ஆரியை எதிர்த்து இப்படியொரு கேவலமான பாட்டை பாடிய நிலையில், ஆரியின் ஆர்மியினர் ரம்யா பாண்டியனை கேவலமாக சமூக வலைதளங்களில் திட்டித் தீர்க்கின்றனர். நெக்ஸ்ட் நீ தான்மா வெளியே போகப் போற என்றும், டம்மி மம்மிக்கு சொம்பு தூக்கும் டம்மி ரம்மி என்றும் விளாசி வருகின்றனர்.